புத்திசாலி தவளை Clever Frog Tamil Kids Story:-ஒரு காட்டு பகுதியில இருக்கிர ஒரு குளத்துல ரெண்டு அழகான மீன்கள் வசிச்சிட்டு வந்துச்சு
அந்த ரெண்டு மீன்களும் ரொம்ப அழகா இருக்குறதுனால ரொம்ப கர்வமா இருந்துச்சு,எப்ப பாத்தாலும் தாங்காதான் ரொம்ப அழகான உயிரினம்னு சொல்லிகிட்டே இருக்கும்
அந்த குளத்துக்கு பக்கத்துல ஏதாவது மிருகங்கள் வந்துச்சுனா அதுங்க கண்ல படுரமாரி தாவி குதிச்சி தங்களோட திறமையை காமிக்கும்
அந்த மீன்களுக்கு ஒரு புத்திசாலி தவள நண்பனா இருந்துச்சு ,அது எப்பவும் நல்லா யோசிச்சு முடிவு எடுக்கும்
அந்த ரெண்டு மீன்கள் செய்யிற செயல் ரொம்ப தவறானதுனு அதுங்களுக்கு எடுத்து சொல்லுச்சு அந்த தவள
ஆனா அந்த தவள பேச்ச கேக்காத அந்த மீன்கள் எப்பவும் போலவே தாவி குதிச்சு விளையாண்டுக்கிட்டு இருந்துச்சுங்க
ஒரு மாலை நேரத்துல அந்த பக்கமா ரெண்டு மீனவர்கள் வந்தாங்க ,ஏற்கனவே அவுங்க மீன் புடிச்சு முடிச்சதால பாத்திரம் நிறைய மீன்களை தூக்க முடியாம தூக்கிட்டு வந்தாங்க
அப்பத்தான் அந்த ரெண்டு மீன்களும் தவிகுதிச்சி விளையாடுறத பாத்தாங்க,அடடா என்ன அழகான மீன்கள் இந்த குளத்துல இதுபோல நிறைய மீன்கள் இருக்கும் போல
நாம இந்த குளத்துல இருந்து கொஞ்சம் மீன்கள் பிடிப்பமானு கேட்டாரு ஒரு மீனவர்
ஏற்கனவே நாம போதிய மீன்கள பிடிச்சாச்சு இதுக்கு மேலயும் மீன்கள புடிச்சோம்னா நம்மள தூக்க முடியாது நாம நாளைக்கு வந்து இந்த குளத்துல மீன் பிடிக்கலாம்னு இன்னொரு மீனவர் சொன்னாரு
இதைக்கேட்ட அந்த தவள அந்த மீன்கள் கிட்ட பாத்தீங்களா நீங்க செஞ்ச செயலால நமக்கு ஆபத்து வந்துடுச்சு
ஆழம் குறைவா இருக்குற இந்த குளத்துல மீன்கள் இருக்காதுன்னு யாருமே இங்க மீன் பிடிக்க வரமாட்டாங்க
அதனால இதனை நாள் நாம சந்தோசமா வாழ்ந்துட்டு வந்தோம் இப்ப நீங்க செஞ்ச காரியாதுனால நமக்கு ஆபத்து வந்திருக்குனு சொல்லுச்சுங்க
இத கேட்ட அந்த மீன்கள் நாங்க அழகான மீன்கள் மட்டும் இல்ல திறமையான மீன்களும் கூட,அந்த மீனவர்கள் எங்கள புடிக்க முயற்சி செஞ்சா எங்களுக்கு தப்பிக்க தெரியும்னு சொல்லுச்சுங்க
இதுக்கு மேல இந்த மீன்களுக்கு புத்தி சொல்ல முடியாதுனு தன்னோட குடும்பத்தையும் தன்னோட பேச்ச கேட்ட சில மீன்களையும் கூட்டிட்டு அடுத்த குளத்துக்கு போயிடிச்சு
மறுநாள் சொன்ன மாதிரியே அந்த ரெண்டு மீனவர்களும் வந்தாங்க அந்த குளத்துல ஒரு பெரிய வலய போட்டு அந்த மீன்களை பிடிக்க ஆரம்பிச்சாங்க
அடடா அந்த தவளையோட பேச்ச கேட்டிருந்த இந்நேரம் தப்பிச்சிருக்கலாமே இப்படி மாட்டிக்கிட்டமேன்னு வருத்தப்பட்டுச்சுங்க அந்த மீன்கள்