Site icon தமிழ் குழந்தை கதைகள்

தாத்தாவின் கிறிஸ்துமஸ் |Christmas Tamil story

Christmas Tamil story For Kids

தாத்தாவின் கிறிஸ்துமஸ் |Christmas Tamil story:- ஒரு ஊருல ஒரு தாத்தா வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவருக்கு எப்பவுமே ஒரே வெறுப்பா இருக்கும்

அப்பத்தான் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துச்சு ,ஊருல இருக்குற எல்லாரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராநாங்க.

எல்லோரும் புது புது துணிகள் வாங்க ஆரம்பிச்சாங்க ,குழந்தைகள் எல்லாரையும் விடுமுறை விட்டதால ஒரே சந்தோசமா இருந்தாங்க

எல்லா குழந்தைகளும் அந்த தாத்தா வீட்டு முன்னாடி போய் விளையாண்டாங்க ,அத பாத்த அந்த தாத்தா ரொம்ப சத்தம் போட்டாரு,இங்க யாரும் விளையாட கூடாதுன்னு அந்த குழந்தைகளை தொரத்தி விட்டாரு.

ஒன்னும் தெரியாத அந்த குழந்தைகள் எதுக்கு தாத்தா திட்றாருனு தெரியாத குழந்தைகள் பயந்து போயி அங்க இருந்து ஓடி போயிடுச்சுங்க

குழந்தைகள் மட்டும் இல்லாம அந்த ஊருல இருக்குற எல்லாரும் அந்த தாத்தா இப்படித்தான் எல்லோரும் சந்தோசமா இருந்தா பிடிக்காதுன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க

கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் அந்த தாத்தா நல்லா தூங்கிகிட்டு இருந்தாரு அப்ப அவர் கனவுல ஒரு தேவதை வந்துச்சு

அன்பானவரே ஏன் எப்போதும் இப்படி சோகமா இருக்கீங்க ,எல்லாரையும் திட்டிகிட்டே இருக்கீங்கன்னு கேட்டுச்சு அந்த தேவதை

உடனே அந்த தாத்தா தன்னோட சின்ன வயசு கதைய எல்லாம் சொல்ல ஆரம்பிச்சாரு

நான் சின்ன வயசா இருக்கும் பொது எங்க அம்மாவும் அப்பாவும் என்ன கிறிஸ்துமஸ் அன்னைக்கு கூட வீட்ல தனியா விட்டுட்டு வெளியில போய்டுவாங்க

எனக்கு வீட்ல தனியா இருக்க பயமா இருக்கும் ,அதனால தனியா ஒரு புத்தகத்த எடுத்து படிச்சிகிட்டே இருப்பேன்

தொடர்ந்து இதேமாதிரி இருந்ததால என்னால யாருகூடவும் பேச பழக முடியல ,தனியா இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு அந்த தாத்தா சொன்னாரு

இதனால எதுக்கு நீங்க சோகமா இருக்கீங்க ஒவ்வொரு வீட்லயம் ஒவ்வொரு மனுசனுக்கும் நடக்குற சாதாரண விஷயம்தானே இதுன்னு சொல்லுச்சு அந்த தேவதை

அதுக்கு அந்த தாத்தா சொன்னாரு இருக்கலாம் ஆனா சின்ன வயசுல சந்தோசமா கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டிய எனக்கு மட்டும் ஏன் தனிமையை அந்த ஆண்டவர் கொடுத்தாருன்னு யோசிக்கிறப்ப என்னால பொறுத்துக்க முடியல அதனாலதான் சந்தோசமா இருக்குற அடுத்தவங்களை பாக்குறப்ப எனக்கு கோபமா வருதுன்னு சொன்னாரு

அடடானு பாவப்பட்ட அந்த தாத்தா நீங்க என்னோட கொஞ்சம் வாங்கன்னு அவரோட கைய பிடிச்சி பறந்து போச்சு

அந்த தாத்தாவோட இளமைக்காலத்துக்கே போன அந்த தேவதை ஜன்னலுக்கு வெளிய இருந்து வீட்டுக்குள்ள நடக்கிறத காட்டுச்சு

அதுவும் ஒரு கிறிஸ்துமஸ் நாள் அந்த தாத்தா தனியா புத்தககம் படிச்சிட்டு இருந்தாரு ,அப்ப அவுங்க அப்பாவும் அம்மாவும் வெளியில கிளம்பிகிட்டு இருந்தாங்க

அந்த அப்பா சொன்னாரு நம்ம மகனுக்கு இன்னும் விவரம் தெரியல நாம கிறிஸ்துமஸ் அன்னைக்கு கூட வேலைக்கு போய் உழைச்சாச்சா தான் அவன் நல்ல படியா படிக்க முடியும் ,இருந்தாலும் எல்லாரையும் போல அவன் சந்தோசமா இருக்க அவன் கிட்ட நாம நம்ம கஷ்டத்தை சொல்ல வேணாம்

நாம ரெண்டு பேரும் வேலைக்கு போறது அவனுக்கு தெரிய கூடாது ,அதனால நாம வெளிய சும்மா போறம்னு சொல்லிட்டு வானு சொன்னாரு

இத பாத்த அந்த தாத்தா அடடா என்னோட வாழ்க்கைக்காக கிறிஸ்துமஸ் அன்னைக்கு கூட வேலைக்கு போயிட்டு ,அதைக்கூட என்கிட்டே சொல்லாத என்னோட பெற்றோரோட தியாகத்தை புரிஞ்சிக்காம இத்தனை நாள் இருந்துட்டமே அப்படினு சொல்லி வறுத்த பட்டாரு

டக்குனு கனவு கலைஞ்சு எந்திரிச்ச அந்த தாத்தா அடடா அந்த ஆண்டவர்தான் தன்னோட கனவுல தேவதையா வந்து நமக்கு நல்லதொரு படத்தை சொல்லிட்டு போயிருக்காரு

இனி எப்போதும் தன்னலத்தோட இருக்க மாட்டேன் உற்றார் உறவினர்கூட சேர்ந்து இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட போறேன்னு சொல்லிட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட ஆரம்பிச்சாரு

Exit mobile version