Site icon தமிழ் குழந்தை கதைகள்

காளை மாட்டு பால் – அக்பர் பீர்பால் கதை-Bull’s milk story of Akbar Birbal 

காளை மாட்டு பால் – அக்பர் பீர்பால் கதை-Bull’s milk story of Akbar Birbal :-அக்பரோட அரசவையில் பீர்பால் வந்ததுக்கு அப்புறமா பீர்பாலுக்கு நிறைய மரியாதையை கிடைச்சது.அதனால ஏற்கனவே மந்திரியா இருந்த பலபேர் எப்படியாவது அகபர் கிட்ட இருந்து பீர்பாலை பிரிக்கணும்னு முடிவு செஞ்சாங்க

ஒவ்வொரு தடவை முயற்சி செய்யும் போதும் பீர்பால் தன்னோட அறிவு கூர்மையாலும் சமயோஜித புத்தியிலும் அவுங்களை ஜெயிச்சி கிட்டே வந்தாரு

ஒருநாள் அக்பருக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு ,அப்ப பழைய மந்திரிகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து பீர்பாலை விரட்டுறதுக்கு ஒரு யோசனை செஞ்சாங்க ,அது படி அரண்மனை வைத்தியர் மூலமா ஒரு மருந்தை அக்பர் கிட்ட கொடுக்க சொன்னாங்க

அப்படி கொடுக்கும் போது காளைமாட்டு பால் கலந்து சாப்பிடணும்னு சொல்ல சொன்னாங்க ,காளைமாட்டு பாலுக்கு எங்க போறதுன்னு அரசர் கேட்டா ,அதி புத்திசாலி பீர்பால் இருக்கும் போது உங்களுக்கு என்ன கவலை ,அவர்கிட்ட சொன்னா நிறைய காளை மாட்டு பால் கொண்டு வருவாருனும் சொல்ல சொன்னாங்க

இத அந்த மருத்துவர் அப்படியே அரசர்கிட்ட சொன்னாரு ,அவரு போனதுக்கு அப்புறமா பீர்பால் கிட்ட இந்த விஷத்தை சொன்னாரு அரசர் ,உடனே எனக்கு காளைமாட்டு பால் கொண்டுவாங்கனு சொன்னாரு அக்பர்

எதோ சதி நடந்திருக்குனு தெரிஞ்சுக்கிட்ட பீர்பால் ,தன்னோட வீட்டுக்கு போனதும் தன்னுடைய சுட்டியான மகளை கூப்பிட்டு இன்னைக்கு நடந்ததையும் ஒரு யோசனையும் சொன்னாரு

அதன்படி ஒரு கூடைநிறய அழுக்கு துணிகளை எடுத்துட்டு போயி அரண்மனை குளத்துல துவைக்க ஆரம்பிச்சா அந்த பொண்ணு ,சத்தம் கேட்ட அரசர் அந்த பொண்ணை கூப்பிட்டு அனுப்பிச்சாரு

அரசர்கிட்ட வந்த அந்த பெண்ணிடம் ஏன் நீ வந்து துவைக்குற அதுவும் இந்த ராத்திரியில அப்படினு கேட்டாரு

அதுக்கு அந்த பொண்ணு சொன்னா எங்க அப்பாவுக்கு பிரசவம் ஆகி குழந்தை பெறந்திருக்குறதால அவரால துணி தொவைக்க முடியலை அதனால் தான் இங்க வந்து துணி தொவைக்கிறதாகவும் சொன்னா

இத கேட்ட அக்பர் சரியா சொல்லு குழந்தையே உங்க அம்மாவுக்கு தானே குழந்தை பிறந்திருக்குனு கேட்டாரு

அதுக்கு அந்த பொண்ணு இல்லை இல்லை எங்க அப்பாவோட வயித்தில இருந்து தான் குழந்தை பிறந்ததுனு சொன்னா

எங்கயாவது ஆம்பளைக்கு குழந்தை பிறக்குமான்னு கேட்டாரு அக்பர் ,அதுக்கு அந்த பொண்ணு சிரிச்சிகிட்டே சொன்னா காளை மாட்டு பால் கேக்குற அரசர் வாழுற இந்த நாட்டுல ஆம்பளைக்கு குழந்தை பேர்க்காதான்னு திருப்பி கேட்டா அந்த பொண்ணு

அப்பத்தான் தன்னோட அவசர புத்திய நினச்சு தனக்குள்ள சிரிச்சிகிட்டு ,நீ யாருனு கேட்டாரு ,அப்பத்தான் அந்த பொண்ணு சொன்னான் நான் பீர்பாலோட மகள் ,அங்க அப்பாவோட அறிவுரைப்படி தான் இப்படி நடந்துக்கிட்டதா சொன்னா

இருந்தாலும் ராத்திரி நேரத்துல இப்படி அரசரை தொந்தரவு செஞ்சதுக்கும் மன்னிப்பு கேட்டுக்கிட்டா அந்த பொண்ணு

பீர்பாலோட அறிவும் அடக்கமும் அவரோட பொண்ணுக்கும் இருக்குறத தெரிஞ்சிகிட்ட அரசர் அவளுக்கு நிறைய பரிசு கொடுத்து அனுப்புனாரு

இந்த தடவையும் தங்களோட கீழ்மையான எண்ணங்களை பீர்பால் தவிடுபொடியாகிட்டாரு அப்படிங்கிறத நினச்சு வருத்தப்பட்டாங்க அந்த பழைய மந்திரி மார்கள்

Exit mobile version