Site icon தமிழ் குழந்தை கதைகள்

Birbal stories Tamil – Back to Square One – வானியல் அறிஞருடன் பீர்பால்

Birbal stories Tamil - Back to Square One - வானியல் அறிஞருடன் பீர்பால்

Birbal stories Tamil – Back to Square One – வானியல் அறிஞருடன் பீர்பால் :- ஒரு நாள் அக்பரோட சபைக்கு ஒரு வானியல் ஆராய்ச்சியாளர் வந்தாரு,அவரு இந்த உலகம் முழுசும் சுத்திவந்து தான் கத்துகிட்ட விஷயத்தை எல்லாத்தயும் அக்பர்க்கிட்ட எடுத்து சொன்னாரு ,

அவரோட பேச்சை ஆர்வத்தோட கேட்ட அக்பருக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு ,அங்க இருந்த எல்லோரும் அக்பரோட ஆர்வத்த பாத்து தாங்களும் தங்களோட அறிவு திறமையை அரசருக்கு காமிக்கணும்னு குறுக்க குறுக்க பேச ஆரம்பிச்சாங்க,அது அரசருக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு

அப்பத்தான் அந்த அறிஞர் சொன்னாரு இந்த பூமி ஒரு கோள வடிவமுடையதுன்னு ,அப்ப அரசருக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு ,உடனே அக்பர் கேட்டாரு அப்ப ஒரு இடத்துல இருந்து நாம பயணிக்க ஆரம்பிச்சா அதே இடத்துக்கு வந்துடுவமான்னு கேட்டாரு

அதுக்கு அந்த ஆராய்ச்சியாளர் சொன்னாரு கண்டிப்பா அரசே ஆனால் பூமியோட அளவையும் கடல்களையும் மலைகளையும் கணக்கு பண்ணி பாத்தா அதுக்கு ரொம்ப காலம் ஆகும்னு சொன்னாங்க ,அப்ப அங்க இருந்த மத்தவங்க தங்களோட மேதாவி தனத்தை கட்டணும்னு பேச ஆரம்பிச்சாங்க

இது என்ன அக்பரோட திறமை தெரியாம பேசிகிட்டு இருக்கீங்க அவரு நினச்சா வேகமா இந்த பூமியை சுத்தி வந்துடுவாருனு ஒருத்தர் சொன்னாரு ,இன்னொருத்தர் அப்படி சுத்தி வர்றதுக்கு எத்தன நாள் ஆகும்னு உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டாரு

அதுக்கு அந்த அறிஞர் சொன்னாரு ,நீங்க ஒரு இடத்துல இருந்து நேரா நடந்தான் இந்த உருண்டையான பூமியில ஆரம்பிச்ச இடத்துக்கே வர முடியும் ,அந்த பாதைல கடல் இருக்கலாம் ,மலை இருக்கலாம் ,பெரிய பள்ளத்தாக்கு இருக்கலாம் அதனால குறைஞ்சது 100 வருடங்களாவது ஆகும்னு சொன்னாரு அந்த அறிஞர்

குறுக்க குறுக்க பேசுன அவுங்களால எரிச்சலான அக்பர் எதுவுமே பேசாத பீர்பாலை பாத்ததும் ஆச்சர்யமா இருந்துச்சு

எதாவது எடக்கு மடக்கா கேள்வி கேக்குற இவரு எதுக்கு அமைதியா இருக்காருன்னு யோசிச்ச அரசர் ,ஏன் பீர்பால் அமைதியா இருக்கீங்கன்னு கேட்டாரு.

நாம ஒரே நாள்ல இந்த உலகத்த சுத்தி வந்திடலாம் அரசேனு சொன்னாரு ,எல்லோரும் ஒரு நிமிஷம் பீர்பாலையே பாத்தாங்க அப்ப அவரு சொன்னாரு ஆனா அதுக்கு நாம சூரியனோட வேகத்துல சுத்தணும்னு சொன்னாரு

உடனே எல்லாரும் சிரிச்சாங்க ,அறிவியல் அறிஞரோட பேச்ச கேக்க விடாம ஒண்ணுமே தெரியாம பேசுனா எல்லாரும் நாம செஞ்சது முட்டாள் தனம்னு நினச்சு ,அவரோட பேச்ச குறிக்கிடாம கேக்க ஆரம்பிச்சாங்க

Exit mobile version