Site icon தமிழ் குழந்தை கதைகள்

புலிக்கு பிறந்தது பூனையாகுமா Birbal Daughter In The Royal Court

புலிக்கு பிறந்தது பூனையாகுமா Birbal Daughter In The Royal Court:பீர்பால் ஒரு நாள் அரசவைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரின் ஐந்து வயது மகள் தானும் அரண்மனைக்கு வருவேன் என்று கூறினார்.

 அதை கேட்ட  பீர்பாலுக்கு இவள் எதிர்த்து அரண்மனைக்கு வரவேண்டும் என்று கூறுகிறார் என்று சந்தேகம் உதித்தது. உடனே நீ எதற்கு அரண்மனைக்கு வர வேண்டும் என்று கூறுகிறார் என்று கேட்டார்.

 உடனே அந்த சிறுமி சொன்னால் நான் இதுவரை அரசரை சந்தித்தது இல்லை நான் இன்று உங்களுடன் அரண்மனைக்கு வந்து அரண்மனையையும் அரசரையும் சந்திக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

 அவளது பிடிவாதத்தை தெரிந்துகொண்ட பீர்பால் அவளையும் அழைத்துக் கொண்டு அரசவைக்கு வந்தார். அந்தச் சிறுமியை முதன்முதலில் சந்தித்த அரசர் பாசத்தோடு அவளைத் தன் அருகில் அழைத்தார்.

 குழந்தாய் உனக்கு நன்றாக பேச தெரியுமா என்று கேட்டார்.

 எனக்கு குறைவாகவும் நிறைவாகவும் பேசத் தெரியும் என்று சொன்னது அந்தக் குழந்தை.

 இந்த விடையை கேட்ட அக்பர் அது எப்படி குறைவாகவும் நிறைவாகவும் நீ பேசுவாய் என்று கேட்டார்.

 அதற்கு பீர்பாலின் மகள்  கூறினாள் மதிப்புமிக்க பெரியோர்களிடம் குறைவாகவும் குழந்தைகளிடம் அதிகமாகவும் பேசுவேன் என்று சொன்னாள்.

 இதற்கு விளக்கம் கேட்டார் அரசர் மேலும் பேசிய அந்த குழந்தை பெரியவர்களிடம் நாம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது எனவே அவர்களுடன் உரையாடும் பொழுது அவர்கள் கருத்துகளை அதிகம் கேட்டுக்கொண்டும். குழந்தைகளிடம் விளக்கமாக அனைத்தையும் சொல்ல வேண்டியிருக்கும் அதனால் அவர்களிடம் அதிகமாக பேசுவேன் என்று கூறினார்.

 இதைக்கேட்ட அரசருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கு ஏற்ப பீர்பாலின் மகள் அவரைப்போலவே பேச்சுத்திறமை கொண்டுள்ளார் என்று வியந்து பாராட்டினார்

Exit mobile version