Angry Snake – கோபக்கார பாம்பு- Snake and Saw Kids Story 001-ஒரு விவசாய கிராமத்துக்கு பக்கத்துல ஒரு காடு இருந்துச்சு ,அந்த காட்டுக்குள்ள நிறைய மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு.
அந்த கிராமத்துல மர வேலை செய்யுற தச்சர் ஒருவர் வாழ்ந்துகிட்டு இருந்தாரு ,அவரு வீட்டுக்கு பக்கத்துலயே காடு இருந்ததால காட்டுல வாழ்ந்த ஒரு பாம்பு அவரு வீட்டு பக்கம் வந்துச்சு.
தன்னோட வேலைகளை முடிச்சிட்டு ரம்பம் ,சுத்தியல் மாதிரி பொருட்களை வீட்டு தரையிலேயே வச்சிட்டு தூங்குறதுக்கு போய்ட்டாரு அந்த தச்சர்
மெதுவா அந்த பொருள் பக்கம் வந்த பாம்பு அங்க இருந்த ரம்பத்தை பாத்ததும் அதோட கைப்பிடிய பாத்ததும் ஏதோ மிருகத்தோட காது மாதிரி தெரிஞ்சது.
உடனே அந்த ரம்பத்தை வளச்சு பிடிச்சது ,அப்ப அந்த ரம்பத்துல இருந்த கூர்மையான பற்கள் பாம்போட உடம்புல கிழிக்க ஆரம்பிச்சது.
உடனே அந்த பாம்போட ரெத்தம் வழிய ஆரம்பிச்சது ,அது அந்த மிருகத்தோட ரெத்தம்னு நினச்சு ரொம்ப இறுக்கமா ரம்பத்த இருக்க ஆரம்பிச்சது அந்த பாம்பு
கோபம் மிக கொடியாதுங்கிற விஷயம் தெரியாத அந்த பாம்பு தன்னோட அறியாமையாள வீணா செத்துப்போச்சு
இந்த கதையை PDF வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்தவும்