கொடுக்கும் கை அக்பர் பீர்பால் கதை – Akbar Birbal Story For Kids-ஒருநாள் அரசவையில் இருக்கும்போது அக்பருக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு
தானம் கொடுக்கும்போது கொடுக்கிறவர் கை மேலயும் ,வாங்குறவர் கை கீழயும் இருக்குது
ஆனா வாங்குறவர் கை மேலயும் கொடுக்கிறவர் கை கீழயும் இருக்குறமாதிரி தர்மம் எதுவும் இருக்கானு கேட்டாரு
இத கேட்ட அவையோர்கள் எல்லாரும் பதில் தெரியாம முழிச்சாங்க
அப்பத்தான் அரண்மனைக்குள்ள வந்தாரு பீர்பால் ,அவருகிட்டயும் அதே சந்தேகத்தை கேட்டாரு அக்பர்
அக்பர் உடனே கொஞ்சம் மூக்கு பொடி கொடுங்கன்னு அரசர்கிட்ட கேட்டாரு
உடனே அரசர் மூக்கு பொடி பொட்டலத்த அவர் எடுக்குறதுக்கு ஏதுவா பவ்யமா நீட்டுனாரு
உடனே அத எடுக்க போன பீர்பால் பாத்திங்களா இப்ப தானம் வாங்குற என் கை மேல இருக்குனு சொன்னாரு
அத பாத்த அக்பரும் ஆமாம்லனு பாத்தாரு
அப்ப பீர்பால் சொன்னாரு ,தானத்தை மேலயும் கொடுக்கலாம் ,கீழயும் கொடுக்கலாம் தானம் கொடுக்குறது தான் முக்கியம்ம்னு சொன்னாரு