Site icon தமிழ் குழந்தை கதைகள்

ஒரு குடம் அதிசயம் – அக்பர் பீர்பால் கதை-Akbar Birbal Pumpkin Story – Pot with wistom

ஒரு குடம் அதிசயம் – அக்பர் பீர்பால் கதை-Akbar Birbal Pumpkin Story – Pot with wistom:-அக்பர் மற்றும் பீர்பாலின் புகழ் உலகில் உள்ள அனைத்து தேசங்களிலும் பரவி இருந்தது ,பீர்பாலின் துணை கொண்டு அக்பர் தீர்த்து வைத்த அனைத்து சிக்கலைகளையும் அண்டை நாட்டு சக்ரவர்த்தி அனைவரும் தெரிந்துகொண்டு ஆச்சரியப்பட்டனர்

அக்பர் மற்றும் பீர்பாலின் புகழை சகித்து கொள்ள முடியாத காபூல் நாட்டு அரசர் அவர்களது புகழை தடுக்க நினைத்தார் ,எனவே அக்பர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்

அந்த கடிதத்தில் ஒரு குடம் அதிசயம் அனுப்பவும் என்று இருந்தது ,அந்த கடிதத்தை படித்த அக்பர் பாதுஷா காபூல் அரசரின் நயவஞ்சக எண்ணத்தை புரிந்துகொண்டார் ,அக்பரை அழைத்து கடிதத்தை கொடுத்தார்

அதை படித்த பீர்பால் அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது ,அரசே அதிசயம் மூன்று மாதங்களுக்கு பிறகு வழங்கப்படும் என்று பதில் கடிதம் அனுப்புங்கள் என்று சொன்னார்

அவரது பேச்சை கேட்ட அக்பர் அவ்வாறே கடிதத்தை அனுப்பினார் ,ஆனால் மூன்று மாதத்தில் எப்படி அதிசயத்தை குடத்தில் அடைக்க முடியும் ,அதிசயம் என்று ஒரு பொருள் உள்ளது ,அது ஒரு மதிப்பு கொண்ட சொல் மட்டுமே ,அதை எப்படி குடத்தில் பிடிப்பது போன்ற கேள்விகள் அக்பர் மனதில் தோன்றியது

இருந்த போதிலும் பீர்பாலின் அறிவையும் திறமையையும் ஏற்கனவே அறிந்திருந்த அரசர் காத்திருக்க முடிவு செய்தார் ,

பீர்பால் ஒரு குடத்தை பூசணி கொடியின் அருகில் வைத்தார் ,புதிதாக பூத்த பூ ஒன்றை குடத்திற்குள் இருக்குமாறு வைத்தார் ,சில நாட்களில் பிஞ்சு விட்ட பூசணி குடத்திற்கு உள்ளாகவே காயாக வளர தொடங்கியது .

மூன்று மாதத்திற்குள் பெரிய பூசணியாக வளர்ந்து விட்டது ,அதை அப்படியே காபூல் அரசருக்கு அனுப்பி வைத்தார் பீர்பால்

மிக பெரிய பூசணி குடத்திற்குள் இருப்பதை கண்ட காபூல் அரசர் வியந்து போனார் தான் கேட்டாற்போல் ஒரு குடம் அதிசயம் அனுப்பி வைத்து தன்னை வியக்க வைத்த பீர்பால் அவர்களில் புத்திசாலித்தனத்தை சோதிக்க எண்ணிய தனது அறியாமையை நினைத்து வருந்தி ,அக்பர் அவர்களுக்கு மன்னிப்பு கடிதமும் ,பீர்பால் அவர்களுக்கு பாராட்டு கடிதமும் அனுப்பினார் அவர்

Exit mobile version