Site icon தமிழ் குழந்தை கதைகள்

அக்பர் பீர்பால் பாரசீக சிங்கம் கதை – Akbar Birbal Persian Lion story in tamil

அக்பர் பீர்பால் பாரசீக சிங்கம் கதை – Akbar Birbal Persian Lion story in tamil:அக்பரும் பாரசீகத்தை ஆண்ட அரசரும் மிகுந்த நட்போட இருந்தாங்க,

ஒருநாள் அக்பர் அரசவையில இருக்கும்போது பாரசீகத்துல இருந்து உங்களுக்கு பரிசு கொண்டுவந்திருக்குறதா சொல்லிட்டு பாரசீக அமைச்சர் வந்திருக்காருனு காவலாளி சொன்னான்

உடனே அவரை வரச்சொல்லி அனுப்பிச்சாரு அரசர் , கொஞ்ச நேரத்துல ஒரு கூண்டுக்குள்ள ஒரு சிங்கத்தோட அரசவைக்கு வந்தாரு அந்த பாரசீக மந்திரி

வணக்கம் அரசரே உங்களுக்கு இந்த தங்க சிங்கத்த எங்க அரசர் கொடுக்க சொன்னாருன்னு சொன்னாரு

அத பத்த அக்பர் அந்த கூண்ட திறந்து எங்கிட்ட அந்த சிங்கத்த கொடுங்கன்னு கேட்டாரு

அதுக்கு அந்த மந்திரி சொன்னாரு அரசே இது தங்க சிங்கம் இத பத்திரமா கூண்டுக்குள்ள வச்சு பூட்டியாச்சு ,உங்க மந்திகளுக்கு புத்தி இருந்தா சிங்கத்தோட கூண்ட தொறக்காமலே சிங்கத்த வெளியில எடுங்க இது எங்க அரசரோட கட்டலைன்னு சொன்னாரு

உடனே அறிவில் சிறந்த நம்ம மந்திரிகளை பாரசீக அரசர் சோதிக்க விரும்பி இந்த சிங்கத்தை கொடுத்து அனுப்பி இருக்காரு ,அறிவில் சிறந்த நம்ம மந்திரிங்க கூண்ட திறக்காம சிங்கத்த வெளியில எடுங்கனு சொன்னாரு

உடனே பீர்பால் எழுந்து அரசே நான் அந்த சிங்கத்தை கொஞ்சம் பார்வையிடலாமான்னு கேட்டாரு ,உடனே அரசரும் சரினு சொன்னாரு

கூண்டு பக்கத்துல போயி அந்த சிங்கத்த பாத்த பீர்பாலுக்கு உண்மை புரிஞ்சது

உடனே அரசே நம்ம அரண்மனை கொல்லனை சூட்டு கம்பியோட வரச்சொல்லுங்கனு சொன்னாரு

பீர்பால் எது செஞ்சாலும் அதுல எதாவது புத்திசாலித்தனம் இருக்கும்னு தெரிஞ்ச அக்பரும் கொல்லனை வரச்சொல்லி சொன்னாரு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா சூடான சூடு கம்பியோட வந்தாரு கொல்லன்

உடனே அந்த சுடுற கம்பிய எடுத்தாரு பீர்பால்

அந்த சூட்டு கம்பிய கூண்டுக்கு நடுவுல செலுத்து அந்த சிங்கத்து மேல வச்சாரு

உடனே அந்த சிங்கம் உருக ஆரம்பிச்சது,இத பாத்த எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யமா போச்சு

உடனே பீர்பால் சொன்னாரு அரசே இது தங்க சிங்கம் இல்ல இது வெறும் மெழுகு சிங்கம் ,கூண்ட தொறக்காம அதையும் வெளியில எடுத்தாச்சுனு சொன்னாரு

பீர்பாலோட சமயோஜித அறிவை கண்ட அந்த மந்திரி ,அரசே உங்கள் மந்திரி பீர்பால் கிட்ட நாங்க தோத்து போய்ட்டோம்னு சொன்னாரு அந்த பாரசீக மந்திரி

அதுக்கு அக்பர் சொன்னாரு உங்க அரசருக்கு இந்த வெறும் கொண்ட கொண்டு போய் நாங்க கொடுத்த பரிசா கொடுங்கன்னு சொன்னாரு

அடுத்தவங்களை மட்டம் தட்டணும்னு பாரசீக அரசர் செஞ்ச இந்த காரியம் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தி கொடுத்திடுச்சு

Exit mobile version