Site icon தமிழ் குழந்தை கதைகள்

Akbar Bharat – Akbar Birbal Story in Tamil- அக்பர் பாரதம்

Akbar Bharat – Akbar Birbal Story in Tamil- அக்பர் பாரதம் :- ஒரு நாள் அக்பர் மகாபாரதம் படிச்சுக்கிட்டு இருந்தாரு ,திடீர்னு ஒரு எண்ணம் அவருக்கு வந்துச்சு

மகாபாரதம் இருக்கும் போது ,ஏன் அக்பர் பாரதம் இருக்க கூடாதுனு ,அப்படி ஒரு புத்தகம் எழுதிட்டு எல்லா தலைமுறைக்கும் தான் யாருன்னு தெரியுமேனு யோசிச்சாறு

உடனே பீர்பால கூப்பிட்டு “அக்பர் பாரதம் ” எழுத சொன்னாரு

பீர்பால் அதுக்கு ,அரசே அதுக்கு ஒரு லட்சம் பணம் செலவாகும்னு சொன்னாரு ,அக்பரும் உடனே அத பீர்பால் கிட்ட கொடுத்துட்டாரு

பீர்பால் கொஞ்ச நாள் வீட்டுலயே இருந்துட்டு ,ஒருநாள் நிறய பேப்பர் பொதி மூட்டையோட அக்பர பார்க்க வந்தாரு

அரசே அக்பர் பாரதம் கிட்ட தட்ட முடிய போகுது ,ஆனா சில சந்தேகம் இருக்கு அத மகாராணிகிட்ட கேட்டு எழுதணும்னு சொன்னாரு

உடனே மகாராணிய கூப்பிட்டாரு அக்பர் ,அவுங்க வந்ததும் ,மகாராணி அவர்களே மகாபாரத்துல திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் இருந்தாங்க ,உங்களுக்கு எத்தனை கணவர்னு கேட்டாரு

அப்பத்தான் அக்பருக்கு தான் செய்யிறது விபரீதமான செயல்னு புரிஞ்சது ,பீர்பால் கொண்டு வந்திருந்த எல்லா பேப்பரயும் தீயில போட்டு எரிச்சிட்டாரு

அரசே அந்த பணத்தை நான் வேற நல்ல காரியத்துக்கு உபயோக படுத்திக்கிறேன்னு சொல்லிட்டு நகரத்துல ஒரு நல்ல நூலகம் கட்டுனாரு பீர்பால்

Exit mobile version