சிங்கமும் சிலையும் -ஈசாப் நீதி கதைகள்-Aesop Fables inTamil:- ஒரு நாள் ஒரு மனிதனும் சிங்கமும் ஒண்ணா சேந்து பயணம் போய்கிட்டுஇருந்தாங்க.
அப்ப ரெண்டுபேருக்கும் ஒரு தர்க்கம் வந்துச்சு,யார் இந்த உலகத்துலயே பலசாலினி ரெண்டு பேருக்கும் பேச்சு வந்துச்சு.
சிங்கம் சொல்லுச்சு இந்த உலகத்துல மனிதன விட சிங்கம்தான் பலசாலின்னு சொல்லுச்சு
அத மறுத்த மனுஷன் சொன்னான் உலகதவுல சிங்கத்த விட மனுஷன்தான் பெரியவன்னு சொன்னான்
அப்படி பேசிக்கிட்டே வந்தப்ப அங்க ஒரு சிலை இருந்துச்சு ,அந்த சிலை ஒரு சிங்கத்து மேல மனுஷன் நிக்கிற மாதிரி இருந்துச்சு
பாத்தியா மனுஷன் எப்படி சிங்கத்து மேல நிக்கிறான்னு சொன்னான்,
அதுக்கு சிங்கம் சொல்லுச்சு ,இது மனுஷன் செஞ்ச சிலை ,இந்த சிலைய சிங்கம் செஞ்சிருந்தா அது வேறமாதிரி இருக்கும்னு சொல்லுச்சு.
அந்த கருத்த ஒத்துக்கிட்ட மனுஷன் அதோட தன்னோட பேச்ச முடிச்சான்.