Site icon தமிழ் குழந்தை கதைகள்

Advice from Old People – முட்டாள் அரசன் – Tamil Stories with moral

Advice from Old People – முட்டாள் அரசன் – Tamil Stories with moral:- ஒரு நாட்ட ஒரு முட்டாள் அரசன் ஆட்சி செஞ்சுகிட்டு இருந்தாரு , அவனுக்கு வயசானவங்கள பாத்தாலே பிடிக்காது

அதனால 60 வயசுக்கு மேல இருக்குறவங்கள நாட்ட விட்டு தொரத்தணும்னு சட்டம் போட்டான், அப்படி நாட்ட விட்டு போகாத எல்லாரையும் தூக்கு போடணும்னும் சட்டம் போட்டான்

அங்க இருந்த ஒரு போர்வீரன் தன்னோட அப்பாவ பிரிஞ்சி இருக்க முடியாம வீட்டு குள்ளேயே ஒரு குழி தோண்டி அதுல மறச்சி வச்சான்

கொஞ்ச காலத்துக்கு அப்புறமா அந்த நாட்டுல பஞ்சம் வந்துச்சு, சேமிச்சு வச்சிருந்த விதை தானியங்கள் கூட மக்களோட பசிக்கு பயன்படுத்திட்டாங்க

அதுக்கு அப்புறமா மழை வந்தப்ப கூட விவசாயம் பண்ண விதைகள் இல்லாம தவிச்சாங்க

ராஜாவுக்கும் , நாட்டு மக்களுக்கும் ஒரே குழப்பம்,

ஆலோசன கேட்க கூட ஒரு முதியவர் இல்லாம வறுத்த பாத்தாங்க

அப்பத்தான் அந்த போர்வீரன் அவுங்க அப்பாகிட்ட போயி நாட்டோட நிலைமையை சொன்னான்

அதுக்கு அந்த முதியவர் சொன்னாரு, ஒவ்வொரு தனியா கிடங்குக்கும் முன்னாடி இருக்குற சாலைல நீங்க உளவு போடுங்கன்னு சொன்னாரு

அப்படியா அந்த போர் வீரன் செஞ்சான் மழைத்தண்ணி பட்டு அந்த உளவுசெஞ்ச இடத்துல இல்லாம பயிர் முளைக்க ஆரம்பிச்சது

அந்த இளம் பயிர்கள எடுத்துட்டு வந்து வயல்ல விதைக்க ஆரம்பிச்சான்

இந்த விஷயம் கேள்விப்பட்ட அரசர் நேராவே வந்து இந்த விஷயம் உனக்கு எப்படி தெரிஞ்சதுன்னு கேட்டாரு

அப்பத்தான் தன்னோட அப்பாவ பத்தி சொல்லி ,அவர வெளிய கூட்டிட்டு வந்தான்

தன்னோட தவறுக்கு வருத்தம் தெரிவிச்ச அந்த அரசன் உங்களுக்கு எப்படி ரோட உழுதா அதுல பயிர் விளையும்னு தெரிஞ்சதுனு கேட்டான்

அதுக்கு அந்த முதியவர் சொன்னாரு , ஒவ்வொரு அங்காடி , தானிய கிடங்குகள்ல பல வருசமா கொட்டுன சிந்தனை விதைகள் எல்லாம் எப்பவும் அழிஞ்சு போறது இல்ல நீர் இல்லாம கூட உயிரோடதான் இருக்கும்

அந்த இடத்தை உழுகுறப்ப நீர் மற்றும் சூரிய வெளிச்சம் பட்ட உடனே அந்த விதைகள் உயிர் பெற்று வளர ஆரம்பிக்குதுன்னு தெளிவா சொன்னாரு

மூத்தவங்களோட அறிவ நாம மதிக்கணும்னு புரிஞ்சுக்கிட்டாரு அந்த அரசன்

Exit mobile version