ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, கடுமையான போட்டி நிலவியது
அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் சிறிது கூட நாகரீகம் இல்லாமல் ஆப்ரஹாம் லிங்கனைப் பார்த்து கடுமையாகச் சாடினார்
உங்களை எனக்குத் தெரியாதா? நீங்கள் சாராயக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்தவ ராயிற்றே என்றார் அவர்.
அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர்
ஆப்ரஹாம் லிங்கனை திகைப்போடு பார்த்தனர்.
ஆப்ரஹாம் லிங்கன் பொறுமையுடன் கூட்டத் தினரைப் பார்த்தார்
பிறகு அமைதியாக அந்த வேட்பாளரைப் பார்த்து நண்பரே நான் சாராயக் கடையில் வேலை பார்த்தது உண்மைதான், நான் டோக்கன் வழங்கும் கவுண்டரின் உள்பக்கம் நிற்கும் போது, நீங்கள் கவுண்டரின் முன்பக்கம் நின்று கொண்டிருப்பீர்களே, அதை ஏன் சொல்லாமல் விட்டீர்கள்?” என்றார்.
அதைக் கேட்டதும் எதிர்க்கட்சி வேட்பாளர் கலை குனிய, மக்கள் பலத்த கைதட்டல் எழுப்பினர் தேர்தலில் அவரையே வெற்றி பெறச் செய்து அமெரிக்காவின் ஜனாதிபதி ஆக்கினர்.