Site icon தமிழ் குழந்தை கதைகள்

A THANKSGIVING SURPRISE – நன்றி செலுத்தும் விருந்து

A THANKSGIVING SURPRISE – நன்றி செலுத்தும் விருந்து :- ஒரு நாள் ஜானும் அவுங்க அம்மாவும் தேங்க்ஸ் கிவ்விங் விருந்துக்கு பொருட்கள் வாங்க கடை தெருவுக்கு போனாங்க

அங்க ஒரு குட்டி பையன் புத்தங்களை ரோட்டல போட்டு வித்துக்கிட்டு இருந்தான்

அந்த குட்டி பையன் ரொம்ப ஏழ்மையான குடும்பத்துல இருந்து வந்தவன்னு அவனை பார்த்தாலே தெரிஞ்சது

உடனே ஜானுக்கும் அவுங்க அம்மாவுக்கும் ரொம்ப பரிதாபமா போச்சு ,உடனே அவனை தங்களோட வீட்டுக்கு கூப்பிட்டாங்க

உடனே அந்த பையன் தன்னோட புத்தகங்களை எல்லாம் பையில தூக்கிகிட்டு ஜானோட வீட்டுக்கு போனான்

வீட்டுக்கு போனதும் அந்த குட்டி பையன சாப்பிட சொன்னாங்க ஜானோட அம்மா ,ஆனா அந்த பையன் எனக்கு இரண்டு தங்கைகள் இருக்காங்க ,அவுங்கள விட்டுட்டு நான் சாப்பிட மாட்டேன்னு சொன்னான்

உடனே ஜானோட அம்மா சொன்னாங்க நீ வீட்டுக்கு போய் அவுங்களையும் கூட்டிகிட்டு வானு சொன்னாங்க ,ஆனா அவுங்க அடுத்தவங்க வீட்டுக்கு வரமாட்டாங்கனு சொன்னான் அந்த பையன் ,உடனே ஜானோட அம்மா சொன்னாங்க கடை தெருவுல ஒரு பொருட்காட்சி நடக்குது அத பார்க்கலாம்னு சொல்லி அவுங்களை இங்க கூட்டிட்டு வானு சொன்னாங்க

உடனே வீட்டுக்கு போன அந்த குட்டி பையன் அவனோட தங்கசிங்க ரெண்டுபேரையும் பொருட்காட்சி பார்க்க வாங்கனு சொல்லி கூட்டிகிட்டு திரும்ப ஜான் வீட்டுக்கு வந்தான்

ஜான் வீட்டுக்கு வந்த அந்த மூணு பேரையும் ரொம்ப ஆச்சர்யத்துல ஆழ்த்துனாங்க ஜானும் ஜானோட அம்மாவும்

விவசாயிகளுக்கும் உழைப்பாளர்களுக்கும் நன்றி சொல்ல கொண்டாடப்படுற தேங்க்ஸ் கிவ்விங் விருந்து இன்னைக்கு இங்க நடக்க போகுது

வாழ்க்கையில ரொம்ப அடிமட்டத்துல இருந்தும் முயற்சியோடு உழைக்கிற நீங்கதான் இந்த வருடம் எங்களோட விருந்தினர்னு சொல்லி சாப்பிட்டு மேஜைக்கு கூட்டிட்டு போயி மூனுபேருக்கும் விருந்து வச்சாங்க ஜானும் அவுங்க அம்மாவும்

அந்த மூணு குட்டி குழந்தைகளுக்கும் ஒரே ஆச்சர்யமா போச்சு , நல்ல சாப்பாடே கிடைக்காத தங்களுக்கு நல்ல ஒரு விருந்து வச்சு தங்களை கவனிச்சுக்கிட்ட ஜானுக்கு ஜானோட அம்மாவுக்கும் நன்றி சொல்லிட்டே சாப்பிட ஆரம்பிச்சாங்க

தங்களோட இந்த நன்றி செலுத்தும் விருந்து நல்ல மனிதர்களோடு அமைஞ்சதுல ஜானுக்கு ரொம்ப பெருமையை இருந்துச்சு ,அன்னைல இருந்து அந்த குட்டி குழந்தைகளோட சிறந்த நண்பனா மாறினான் ஜான்

ஒவ்வொருத்தருக்கும் நன்றி தெரிவிக்க பரிதாபம் தேவையில்லை ,ஒருத்தரோட முயற்சியை பன்மடங்கு அதிக படுத்துற இந்த மாதிரி நிகழ்வுகள் மனித வரலாற்றுல தொன்று தொட்டு நடத்தப்பட்டு வர்றத பத்தி ஜானோட அம்மா விவரமா எல்லா குழந்தைகளுக்கும் சொன்னாங்க ,தொடர்ந்து எல்லா வருசமும் ஏழை எளியவர்களை கவுரவப்படுத்தி அவுங்களோட முயற்சியை துரிதமாக்குற இந்த மாதிரி விருந்த தொடர்ந்து நடத்துனாங்க அவுங்க

Exit mobile version