ஒரு பாலைவனத்துக்கு பக்கத்து கிராமத்துல ஒரு அழகான ரோஜா செடி இருந்துச்சு
அதுக்கு தான் ரொம்ப அழகா இருக்கோம்னு திமிரோட இருந்துச்சு
பக்கத்துல இருக்குற கற்றாழை செடியை பாத்து எப்பவும் கேலி செய்யும் அந்த ரோஜா செடி
அந்த ரோஜா கேலி பேசுறது பக்கத்துல இருக்குற செடிங்க தப்புனு சொல்லுச்சுங்க
நீவென்ன அழகான பூபூக்குற செடியா இருக்கலாம் ஆனா ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு வகையில சிறப்பானது அதனால நீ பேசாம இருனு சொல்லுச்சுங்க
இத எதையுமே கேக்காத அந்த ரோஜா கற்றாழை செடியை பாத்து நீ ஏன் இப்படி முள்ளு முள்ளா அசிங்கமா இருக்கன்னு கேட்டுச்சு
தன்மேல் நம்பிக்கையோட இருந்த அந்த கற்றாழை எதுவுமே பேசாம இருந்துச்சு
சிலகாலங்களுக்கு பிறகு அந்த பகுதியில பஞ்சம் வந்துச்சு
அங்க ஒரே தண்ணீர் கஷ்டம்
அந்த செடிங்களால உயிர்வாழவே ரொம்ப கஷ்டப்பட்டுச்சுங்க
கற்றாழை செடி நீண்ட வேரையுடைய செடிகளை அதுபாட்டுக்கு இருந்துச்சு
ஆனா தன்னோட அழகா பத்து தார் பெருமை பட்ட அந்த ரோஜா தண்ணி இல்லாம
கஸ்த்தப்பட்டு அழிஞ்சு போச்சு