Site icon தமிழ் குழந்தை கதைகள்

ஒரு கிலோ வெண்ணை -A Pound of Butter Story In Tamil

A Pound of Butter Story In Tamil:-ஒரு கிராமத்துல ஒரு விவசாயி இருந்தாரு அவருக்கு நிறைய பசுமாடுகள் இருந்துச்சு.அந்த பசு மூலமா கிடைக்குற பால் ,தயிர் ,வெண்ணை எல்லாத்தையும் வித்து நிறைய பணம் சம்பாதிச்சாரு அந்த விவசாயி

அவரு தினமும் பசு கொடுக்குற வெண்ணெல இருந்து ஒருகிலோ பக்கத்துல இருக்குற பேக்கரிக்கு கொண்டுபோய் கொடுத்துட்டு காசு வாங்கிப்பாரு,

அந்த பேக்கரி காரர் ஒருநாள் அந்த வெண்ணெய எப்பவும் கேள்விகேக்கம நெருத்து பக்கமா வாங்குறமேன்னு யோசிச்சாறு

உடனே திராசுல வச்சு அளந்து பாத்தாரு ஆனா அந்த வெண்ணை ஒரு கிலோ இல்லாம கொஞ்சம் குறைவா இருந்துச்சு

உடனே அந்த பேக்கரிக்காரர் ரொம்ப கோபப்பட்டாரு ,உடனே பக்கத்துல இருந்த பஞ்சாயத்து தலைவர்கிட்ட போய் சொன்னாரு

உடனே ஊர் தலைவர் ஒரு ஆள அனுப்பிச்சு அந்த விவசாயிய கூட்டிட்டு வர சொன்னாரு

அங்க வந்த விவசாயிகிட்ட நீ கொடுத்த வெண்ணை ஒரு கிலோ இல்லாம குறைவா இருக்கு ,இதுக்கு நீ என்ன சொல்றன்னு கேட்டாரு

அதுக்கு அந்த விவசாயி சொன்னாரு ஐயா நான் தெரிஞ்சே எந்த தப்பும் பண்ணல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிலோ தின்பண்டம் அந்த கடைல இருந்துதான் வாங்கிட்டு போவேன்

மறுநாள் திராசுல அவர்கொடுத்த தின்பண்டத்துக்கு சரியா வெண்ணெய எடை போட்டு கொண்டு போய் கொடுப்பேன்னு சொன்னாரு

யோசிச்சு பாத்த தலைவர் உண்மையான குற்றவாளி பேக்கரி கடைக்காரர்தானு முடிவு பன்னுன்னாரு ,உடனே அவர் கடைல இருக்குற தின்பண்டங்கள் பாக்கெட் எல்லாத்தையும் எடை போட்டு பாத்தாரு

அப்பத்தான் தெரிஞ்சது எடை குறைவான தின்பண்டங்களை வித்து ஊருல இருக்குற எல்லாத்தையும் இந்த பேக்கரி காரர் தான் ஏமாத்திக்கிட்டு இருந்தாருன்னு

உடனே அவருக்கு அபராதம் போட்டாரு அந்த தலைவர்

நீ :- நீங்கள் செய்வதே உங்களை வந்தடையும்

Exit mobile version