யானையும் பாலமும் -The Elephant’s Living Bridge:-ஒரு மிக பெரிய காட்டுல ஒரு பெரிய யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு
அந்த யானையோட உருவத்த பார்த்து அந்த காட்டுல வாழ்ந்துகிட்டு வந்த மிருகங்கள் எல்லாம் ரொம்ப பயந்துச்சுங்க
யானை வர்ற பக்கம் கூட போக பயந்துச்சுங்க அந்த மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளுக்கு யானை ஒரு பெரிய அரக்கன்னு கதை சொல்லி யானை இருக்குற பக்கமே போக விடாம செஞ்சுச்சுங்க
இத எதுவுமே கண்டுக்காத யானை தன்னோட வாழ்க்கையை நிம்மதியா வாழ்ந்துச்சு ,இருந்தாலும் குட்டி குட்டி மிருகங்கள் தன்னை அரக்கனா பார்த்து ஓடி ஒளியிறத பார்த்து ரொம்ப வறுத்த பட்டுச்சு
தன்னோட பழகாம தன்ன பத்தி எதுவுமே தெரியாம தன்ன எல்லாரும் உதாசீன படுத்துறது யானைக்கு வருத்தத்த கொடுத்துச்சு , இருந்தாலும் தைரிய சாலியான யான அதோட வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிச்சு
ஒரு நாள் காட்டுக்குள்ள பெரிய மழை பெஞ்சு திடீர்னு வெள்ளம் வர ஆரம்பிச்சுச்சு , குட்டி குட்டி மிருகங்கள் வாழுற இடத்த சுத்தி பெரிய ஆறு மாதிரி தண்ணி ஓட ஆரம்பிச்சிச்சு ,அதனால தீவுல மாட்டிக்கிட்ட மாதிரி எல்லா மிருகங்களும் உள்ளேயே மாட்டிகிடுச்சுங்க
வெளிய வந்து உணவு தேட முடியாத நிலை ஏற்பட்டுச்சு ,எல்லா மிருகங்களும் தங்களோட குட்டிகளோட பட்டினி கிடந்துச்சுங்க
அப்ப அந்த பக்கம் வந்த யானை இத எல்லாம் பார்த்துச்சு ,ரொம்ப நாளாவே தன்னோட வேலைய மட்டும் பார்த்துகிட்டு இருந்த யானை ஒண்ணுமே பேசாம அங்க இருந்து நடக்க ஆரம்பிச்சுச்சு
அப்ப ஒரு குட்டி குரங்கு யானை மாமா எங்க குடும்பமே பசியில கிடக்கு எங்களுக்கு உதவ கூடாதான்னு கேட்டுச்சு ,அத பார்த்து சிரிச்ச யானை நான்தான் அரக்கன் மாதிரி இருக்கேனே என்ன பார்த்தா பயமா இல்லையா உங்களுக்குனு கேட்டுச்சு
அப்ப அந்த குட்டி குரங்கு சொல்லுச்சு எங்க அப்பா அம்மா உங்க உருவத்த பார்த்து எங்களுக்கு எதுவும் ஆபத்து வந்திட கூடாதுனு அப்படி சொல்லி வளர்த்தாங்க ,ஆனா ஒருத்தரோட உருவத்த வச்சு அவுங்களோட குணத்தை எட போட கூடாதுனும் சொல்லி இருக்காங்க ,உண்டாளோட அமைதியான வாழ்க்க முறையை பார்த்த எனக்கு நீங்க ஆபத்தானவர்னு தோணலைன்னு சொல்லுச்சு
முதல் முறையா ஒரு குட்டி மிருகம் தன்கிட்ட பேசுவதும் யானைக்கு ரொம்ப சந்தோசம் வந்திடுச்சு ,உடனே தன்னோட துதிக்கையை தண்ணிக்கு மேல வச்சுச்சு ,உடனே அந்த குட்டி குரங்கு அதுமேல ஏறி வெளிய வந்துடுச்சு ,உடனே எல்லா மிருகங்களும் யானையோட துதிக்கையில ஏறி அந்த இடத்துல இருந்து வெளிய வந்துடுச்சுங்க.
அன்னைல இருந்து யானையையும் தங்கள்ல ஒருத்தரா நினைச்சு பழக ஆரம்பிச்சுச்சுங்க அந்த குட்டி மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளையும் அந்த யானையோட விளையாட அனுமதிச்சுச்சுங்க ,அதனால ரொம்ப சந்தோசமா வாழ ஆரம்பிச்சு யானை