Site icon தமிழ் குழந்தை கதைகள்

மழை தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள் – Rain Tells His Own Story Essay For Kids

மழை தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள் – Rain Tells His Own Story Essay For Kids:-எனது பெயர் மழை நான் கடலில் இருந்து நீர்திவலைகளாக மேகத்தை அடைந்து அணைத்து இடங்களிலும் பொழிவேன்,

Photo by Vlad Chețan on Pexels.com

இந்த புவியில் நன்னீரை அனைத்து பகுதிகளுக்கும் கடத்தும் பொறுப்பு என்னுடையது ,நான் இல்லா விட்டால் வேளாண் தொழில் செய்ய நீங்கள் மிகவும் கஷ்டப்படுவீர்கள் ,எனவே தான் என்னை பெற நீங்கள் அதிக மரங்களை நாட வேண்டும் என உங்கள் அரசு உங்களை வலியுறுத்துகிறது

எனது பிறப்பு மேகத்தில் துவங்குகிறது ,பொதுவாக வானுயர்ந்த மலைகளில் பொழியும் நான் ஆற்றில் இணைந்து கடல் நோக்கிய பயணத்தில் அனைத்து உயிர்களுக்கும் நன்னீரை வழங்குகிறேன்

தமிழ் மொழியில் எனக்கு கார் ,மாரி,ஆலி, என வேறு பெயர்கள் வைத்துள்ளனர் ,இருந்த போதிலும் என்னை வர்ணித்து தமிழ் எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கான பெயர்களை எனக்கு சூட்டியுள்ளனர்

இந்த புதிய அறிவியல் காலகட்டத்திலும் புவியின் வெப்பநிலையை சமன் செய்யும் பொறுப்பு என்னிடமே உள்ளது ,உங்களை போன்ற குழந்தைகள் என்னை அதிகம் நேசிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது

Exit mobile version