மந்திர மரம் -Curse of the Magic Tree:-முன்னொரு காலத்துல பெரிய காடு ஒன்னு இருந்துச்சு அந்தக் காட்டுக்குள்ள மந்திர மரம் இருக்கிறதாவும் அது கிட்ட போய் வேண்டிக்கிட்டா தங்களுக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும் அப்படின்னு காட்டு மிருகங்களு இடையே ஒரு பேச்சு இருந்துச்சு
ஆனால் அந்த மரத்தை கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம் இல்லை அப்படி கண்டுபிடிச்சாலும் கண்டுபிடித்து மிருகங்களுக்கு கேட்டது கிடைத்தாலும் கடைசியில் துன்பம் மட்டும் தான் கிடைக்குது அப்படின்னு ஒரு கதை உண்டு அப்படி இருக்கிறப்பதான் ஒரு கழுதையும் நரியும் கரடியும் அந்த மரத்தை கண்டுபிடிக்க காட்டுக்குள்ள போச்சுங்க
காட்டோட உள்பகுதிக்கு போயி எவ்வளவு தேடியும் மந்திர மரத்தை கண்டுபிடிக்க முடியல அப்பத்தான் அவங்க முடிவு பண்ணாங்க நம்ம மூணு பேரும் வெவ்வேறு திசையில போயி கொஞ்சம் கொஞ்சமா தேடிப் பார்ப்போம் யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கோ அவங்க முதல்ல கண்டுபிடிக்கட்டும் அப்படின்னு சொன்னாங்க
இந்தத் திட்டம் எல்லாருக்கும் பிடிச்சிருந்துச்சு அதனால மூணு பேரும் தனித்தனி திசையில பயணம் செய்ய ஆரம்பிச்சாங்க அப்படி இருக்கப்பத்தான் முதல்முறையா கரடி அந்த மந்திர மரத்தை பார்த்துச்சு உடனே தான் இந்த காட்டுக்கே ராஜாவா மாறனும் அப்படின்னு வேண்டிக்கிச்சு அது மாதிரியே நடக்கும் அப்படின்னு ஒரு சத்தம் வானத்திலிருந்து கேட்டுச்சு மந்திர மரத்துகிட்ட வரம் வாங்கின கரடி அங்க இருந்து தான் வசிக்கிற காட்டுக்கு போச்சு
அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது சிங்க ராஜாவுக்கு உடம்புக்கு முடியலன்னு உடனே அங்கு இருந்த மந்திரிகள் எல்லாம் சேர்ந்து இப்போதைக்கு யாரையாவது கொஞ்ச நாளைக்கு காட்ட ஆளுற தற்சமய ராஜாவா நியமிப்போம் அப்படின்னு பேசிகிட்டு இருந்தாங்க சரியான நேரத்துக்கு அங்க போன கரடியை பார்த்ததும் நம்ம கரடியாரே நல்ல பலசாலியாகத்தான் இருக்காரு இவர வேணா கொஞ்சம் காலம் ஆட்சி செய்ய சொல்லுங்க அப்படின்னு குரங்கு மந்திரி சொன்னதும் எல்லோரும் சரின்னு சொன்னாங்க மந்திரம் மரத்தை வேண்டுனதுனால தனக்கு நல்லது தான் நடந்திருக்குனு நினைத்த கரடி ரொம்ப சந்தோஷமா ஆயிடுச்சு
அந்த நேரத்துல தான் நரி அந்த மந்திர மரத்தை கண்டுபிடிச்சுச்சு , மந்திர மரத்துக்கிட்ட தனக்கு நிறைய பொன்னும் பொருளும் வேணும் அப்படின்னு நினைச்சுச்சு உடனே உன்னுடைய இடத்துக்கு போய் உன்னோட வீட்டுப் பக்கம் பாரு அங்க உனக்கு நிறைய பொன்னும் பொருளும் கிடைக்கும் அப்படின்னு வானத்திலிருந்து சத்தம் கேட்டுச்சு உற்சாகமான நரி நேர தன்னுடைய வீட்டு பக்கம் போச்சு அங்க நிறைய பொன்னும் பொருளும் இருந்துச்சு
இந்த நேரத்துல தான் மந்திர மரத்தை கண்டுபிடிச்சுச்சு கழுதை மந்திரம் மரத்து கிட்ட வேண்டுன எந்த மந்திரமும் கிடைச்ச பொருட்களோ துன்பத்தைத் தான் தருது அப்படின்னு அது கேள்விப்பட்ட கதையை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு தனக்கு ஒன்னும் கேட்காம அடுத்தவர்களுக்கு கட்டுவோம் அப்படின்னு ஒரு முடிவோட இருந்துச்சு கழுத அதனாலதான் என்கிட்ட உதவி கேட்டு வர்றவங்க எல்லாம் சந்தோஷமா இருக்கணும் அவங்க துன்பத்தை எல்லாம் நான் தீர்த்து வைக்கணும் அப்படின்னு வேண்டிக்கிடுச்சு
உடனே வானத்துல இருந்து நீ வேண்டி கிட்டாது கிடைக்கு ,அதே நேரத்துல நீ அடுத்தவங்க சந்தோசத்துக்காக வேண்டுனதுநாள உனக்கு மன நிம்மதியும் கிடைக்கும்னு ஒரு சத்தம் கேட்டுச்சு உடனே உற்சாகமான கழுதை தன்னோட வசிப்பிடத்துக்கு போயி சந்தோசமா படுத்து தூங்குச்சு
நாட்களாக நாட்களாக கரடிக்கு துன்பம் தான் நேர ஆரம்பிச்சுருச்சு ஒவ்வொரு மிருகங்களும் தினம் தினம் வந்து தங்களுக்கு இந்தப் பிரச்சனை அந்தப் பிரச்சனை அப்படின்னு சொல்லி முறையீட்டுக்கிட்டே இருந்தாங்க அவங்களுக்கு தன்னால உதவி செய்யவே முடியாத நிலைமைக்கு போச்சு கரடி ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க முடியல இந்த வரம் ஏன் வாங்கினேன் அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்ட கரடி நோய்வாய்ப்பட்டிருந்த சிங்க ராஜா கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு காட்டுக்குள்ள போய் ஒளிஞ்சிகிடுச்சு
பொண்ணும் பொருளும் அதிகமா கிடைச்சதால நரிய யாருமே கண்டுக்கல சாப்பிட கிடைச்ச ஒரு பழத்தை கூட நரிக்கு மத்த மிருகங்கள் கொடுக்க விரும்பல, நீ தான் இவ்வளவு பணமா வச்சிருக்கேல்ல நீயே உனக்கான சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக்கோ அப்படின்னு சொல்லிட்டு போயிடுச்சுங்க மத்த மிருகங்கள் இப்படியே தொடர்ந்து தான் புறக்கணிக்கப்படுவதை நினைத்த நரி தன் கிட்ட இருந்த மொத்த பணத்தையும் நேரா கொண்டு போயி காட்டுக்குள்ள போட்டுட்டு வந்துருச்சு
ஆனா அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும் அப்படின்னு நோக்கத்தோட புத்திசாலித்தனமா கேள்வி கேட்ட கழுதையோட புகழ் உலகம் முழுசும் பரவுச்சு யாராவது தனக்கு பசிக்குது அப்படின்னு கழுத கிட்ட கேட்டு வந்தா கழுதைக்கு தானா நிறைய உணவு வந்து சேர்ந்துச்சு ஏன்னா அவங்களுக்கு உதவி செய்யுற நிலைமையில தான் இருக்கணும்னு ஏற்கனவே மந்திரம் மரத்துகிட்ட வேண்டி இருந்ததால நிறைய உணவு கழுதைக்கு கிடைத்தது அது அடுத்தவங்களுக்கு கொடுத்துட்டு மீதி இருக்கிற உணவை தான் சாப்பிட்டு நிம்மதியா தன்னோட வாழ்க்கைய தொடர்ந்துச்சி கழுதை
மந்திர மரத்துகிட்ட வேண்டிக்கிட்டு வந்தா துன்பத்தில தான் முடியும் அப்படி என்ற சாபத்தை ஜெயிச்ச கழுதை காட்டு விலங்குகள் மத்தியில பெரிய கதாநாயகனா மாறிடுச்சு எல்லாம் மிருகங்களும் தங்களோட பிரச்சனையை கழுத தீர்த்து வைக்கவும் சிங்கராஜாவுக்கு அடுத்தபடியா கழுதையைத்தான் உயர்வாக நினைக்க ஆரம்பிச்சாங்க
