Site icon தமிழ் குழந்தை கதைகள்

நாய் கட்டுரை – Dog Essay For Children in Tamil

நாய் கட்டுரை – Dog Essay For Children in Tamil :- கற்கலாம் தொட்டே மனிதனுக்கு உதவும் விலங்குகள் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது நாய்களாகும். மனித வளர்ச்சியில் வேட்டையாடிய மக்களுக்கு வேட்டைக்கு துணைபுரிந்தும் ,விவசாயம் பார்க்கும் மக்களுக்கும் பிராணிகள் வளர்ப்பில் காவலாகவும் மனிதர்களுக்கு உற்ற நண்பனாக இருந்து வருகின்றன நாய்கள்

Photo by Blue Bird on Pexels.com

வீட்டு விலங்குகள் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதும் இந்த நாய்கள் தான் ,குழந்தைகளுக்கு உற்ற தோழனாக வீடுகளில் வளர்க்கப்படும் வீட்டு விலங்கு இதுவாகும் .

மனிதர்களுக்கு தங்களது விசுவாசத்தை கொடுத்து வீடுகளில் எஜமானராக பாதுகாக்கும் காவலனாக தொன்று தொற்று வாழ்ந்து வருகின்றன இந்த நாய் நண்பர்கள்

நாய்களை வீடுகளில் வளர்க்கும் காலம் இந்திய இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.பழங்கால கல்வெட்டுகள் ,குகை ஓவியங்களை பார்க்கும்போது மனித பரிணாம வளர்ச்சியுடன் நாயின் நட்பு குறித்தான தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன

தற்சமயம் மரபு மாற்றப்பட்ட ,அழகு சேர்க்கப்பட்ட முக்கிய நாய் வகைகள் லட்சக்கணக்கான பணம் கொடுத்து வாங்கும் பழக்கம் நமது ஊர்களுக்கே வந்துவிட்டது . அதீத கம்பீரம் கொண்ட மேற்கத்திய நாய்களை விரும்பி வாங்கும் பழக்கத்துடன் ,அழகிய சிறிய அளவே வளரும் நாய்களை வாங்கி வளர்ப்பதும் பொதுவாக போய்விட்டது

Exit mobile version