கோவக்கார கரடி -Honey’s Bitter Lesson:-குவா காட்டுல நிறைய மிருகங்கள் நிம்மதியா வாழ்ந்துகிட்டு வந்தாலும் சேட்டை செய்ற காட்டு மிருகங்களும் வாழ்ந்துகிட்டு தான் இருந்துச்சு அவங்க மத்த விலங்குகளை தொந்தரவு செஞ்சு அதுல மகிழ்ச்சி அடைஞ்சாங்க
இதுல எல்லாம் முதல்ல இருந்தவரு கோவக்கார கரடியார், அந்தக் கரடி எப்பவும் காட்டுல வாழ்த்துகிட்டு இருந்த மத்த மிருகங்கள தனக்கு கீல தான் அப்படின்ற ஒரு எண்ணத்தோட வாழ்ந்துச்சு அதனாலேயே குட்டி குட்டி மிருகங்கள் தன் கிட்ட வந்தாலே அதுகள பயமுறுத்தி கத்தி விரட்டி சந்தோஷப்பட்டு கிட்டே இருந்துச்சு
அப்பத்தான் ஒரு நாள் அதோட குகைக்கு வெளியில இருந்த பெரிய மரத்துல ஒரு பெரிய தேன்கூடு இருக்கிறத பார்த்துச்சு உடனே மரத்து மேல ஏறின கோபக்கார கரடி தேனடைய மொத்தமா பிச்சு கீழே போட்டு அதில் இருந்த தேன் முழுசயும் குடிச்சிருச்சு இதை பார்த்த தேனீக்கள் உங்களுக்கு தேன் வேணும்னா எடுத்து சாப்பிடுங்க எங்களோட கூடான தேனடைய எதுக்கு இப்படி பிச்சு போடுறீங்க அப்படின்னு கேட்டுச்சுங்க
அதுக்கு பதில் ஏதும் சொல்லாத கோவக்கார கரடி தேனடை உண்ட மிச்ச மெழுகு எல்லாத்தையும் தேனீக்கள் மேல விசிறி அடிச்சு துரத்தி விட்டுச்சு தேன்கூடு மொத்தமா இல்லாம போனதுனால அடுத்த மரத்தில புதுசா தேன் கூடி கட்டி சேகரிக்க ஆரம்பிச்சுச்சுங்க அந்த தேனீக்கள் கொஞ்ச நாள் கழிச்சு ஒரு பெரிய தேன் அடையா உருமாறுச்சு அவங்களோட உழைப்பு
அப்பயும் அதைப் பார்த்த கோபக்கார கரடி மேல ஏறி வந்து தேனடைய மொத்தமா பிச்சு கீழே போட்டு வழக்கம்போலதேனை மட்டும் சாப்பிட்டு திமிர் தனமா தேனீக்களை துறத்த ஆரம்பிச்சுருச்சு நம்ம சொல்றத இந்த கரடி கேட்காதுன்னு முடிவு பண்ணுன தேனீக்கள் வேற ஒரு உயரமான மரத்து மேல தங்களுடைய தேன்கூட்ட கட்டுச்ச்சுங்க
இப்படி கோவக்கார கரடி வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த காட்டுக்கு ஒரு தடவை நிறைய வேட்டை நாய்கள் வந்துச்சு காட்டுக்குள்ள புது சத்தம் கேட்குதேனு அது என்னனு பார்க்க போன கோவக்கார கரடி பத்து வேட்டை நாய்களால சுத்தி வளைக்கப்பட்டுச்சு பலசாலியான கோவக்கார கரடியால அதுங்கள சமாளிக்கவே முடியல கோவக்கார கரடி உடம்பு முழுசும் கடிச்சு கொதர ஆரம்பிச்சிருச்சு அந்த வேட்டை நாய்கள்
உடம்பு முழுவதும் காயத்தோட அங்கே இருந்து தப்பிச்சு வந்த கோவக்கார கரடி தன்னோட குகை வாசல்ல உட்கார்ந்து இருந்துச்சு நாய்கள் கடிச்சதுனால ஏற்பட்ட புண் வழியா ரத்தம் கசிவதை தொடச்சிக்கிட்டே இருந்த கோவக்கார கரடி வலியால ரொம்ப துடிச்சுச்சு
இத பாத்துக்கிட்டே இருந்த தேனீக்கலோட தலைவன் பறந்து வந்து ஒரு சொட்டு தேன கரடியோட புண்ணுல படுற மாதிரி விட்டது நாய் கடிச்சதுனால எரிச்சலோடு இருந்த காயத்துல தேன் பட்டதும் கரடிக்கு ஜில்லுனு இருந்துச்சு தினமும் அந்த கோவக்கார கரடி ஓட புண்ணுக்கு மருந்து போடுற மாதிரி ஒவ்வொரு சொட்டு தேனை கொண்டு வந்து போட்டுச்சு தேனீக்களோட தலைவன்
உலகத்திலேயே பழமையான மருந்தான தேன் பட்டதும் கோவக்கார கரடியோட காயம் எல்லாம் சீக்கிரமாவே குணமடைஞ்சிடுச்சு தன்னோட பலத்த காமிக்கிறதுக்காக அடிக்கடி தேன்கூட்ட கலைச்சி போட்ட தேனி கூட துன்புறுத்திட்டு வந்ததா நினைச்சு வருத்தப்பட்ட கரடி அப்ப இருந்து அந்த காட்டுக்கே காவக்காரனா மாறிடுச்சு
எளியோரை துன்புறுத்தக் கூடாது அப்படின்னு சொல்றதுக்காகவே இந்த கதையை எழுதி இருக்காங்க
