Site icon தமிழ் குழந்தை கதைகள்

காட்டு முயல் கதை -Roopa the Brave-Who Saved the Forest

காட்டு முயல் கதை -Roopa the Brave-Who Saved the Forest:-முன்னாடி ஒரு காலத்துல குவா காடு அப்படின்னு ஒரு மிகப்பெரிய காடு இருந்துச்சு அந்த காட்டுல நிறைய மிருகங்கள் சந்தோசமா வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அங்கதான் ரூபா அப்படின்னு ஒரு குட்டி முயல் பிறந்துச்சு அந்த முயல் பிறக்கும் போதே ஒரு பக்க காது கேட்காமலும் ஒரு பக்க கண்ணு தெரியாமலும் இருந்துச்சு அதைப் பார்த்ததும் அவங்களோட அப்பா அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க

வளரும்போது அம்மா அப்பா தன்னைப் பார்த்து ரொம்ப வருத்தப்படுறதை நினைத்த ரூபா முயல் வளரும் போது தன்னம்பிக்கை இல்லாம வளர ஆரம்பிச்சுச்சு அப்பத்தான் பக்கத்து காட்டுல இருந்து வந்த ரூபாவோட தாத்தா ரூபா கூட கொஞ்ச நாள் தங்க ஆரம்பிச்சாரு

ரூபாவோட நிலைமையை புரிஞ்சுகிட்ட அவரு ரூபாவுக்கு ஆதரவா இருந்தாரு ரூபாவ பார்த்து வருத்தப்பட்டுக்கிட்டு இருந்த ரூபாவோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஆறுதல் சொல்லி மனச தேத்துனாரு ரூபாவோட தாத்தா

ரூபா விளையாடப் போறப்பையும் உணவு தேடி போறப்பையும் அவங்க தாத்தா அதுக்கு பாதுகாப்பா போய்க்கிட்டே இருந்தாரு அப்பத்தான் அவருக்கு ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுச்சு ரூபாவுக்கு ஒரு காது கேட்காது அதனால இன்னொருக்காது ரொம்ப துல்லியமாக கேட்டுச்சு

அதே மாதிரி ரூபாவோட ஒரு கண்ணு தெரியலைன்னாலும் இன்னொரு கண்ணு தொலைதூரத்தில இருக்கிற பொருளை கூட பார்க்க முடிகிற அளவுக்கு நல்லபடியா இருந்துச்சு இத கவனிச்ச ரூபாவோட தாத்தா ரூபாவோட அம்மா அப்பா கிட்ட இந்த விஷயத்தை சொன்னாரு

ஏற்கனவே வருத்ததுல இருந்த அவங்க இந்த விஷயத்தை பெருசா எடுத்துக்கிடல தன்னோட குழந்தைக்கு ஒரு காதும் கண்ணும் இல்லாதது அவங்களுக்கு வருத்தத்தை கொடுத்துக்கிட்டே இருந்துச்சு அப்படி இருக்கிறப்பதான் ஒரு நாள் அந்தக் காட்டுக்கு வேட்டையாடுற வேட்டை காரர்கள் ஒரு கூட்டமா வந்தாங்க

அவங்க அந்தக் காட்ட சுத்தி வளச்சுட்டு கொஞ்சம் கொஞ்சமா காட்டோட நடுப்பகுதிக்கு வந்தாங்க அப்படி நெருங்க நெருங்க காட்டுல இருக்க எல்லாம் மிருகத்தையும் வளவச்சு பிடிக்கிறது துப்பாக்கியால சுடறதுன்னு கொடுமை பண்ண ஆரம்பிச்சாங்க

அவங்கள தாண்டி காட்டை விட்டு வெளியே போறது எப்படின்னு காட்டுக்குள்ள அடைபட்டுக் கிடந்த மிருகங்கள் யோசிக்க ஆரம்பிச்சுச்சுங்க அவங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியல

அப்பத்தான் ரூபாவோட தாத்தா பேச ஆரம்பிச்சாரு இதோ பாருங்கள் மிருகங்களே நம்மள சுத்தி வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமா நெருங்கி வந்து வேட்டையாடுறாங்க நான் கவனிச்ச வரைக்கும் அவங்க அதிகமா ஓய்வு எடுக்கிறது இல்ல இருந்தாலும் சில நேரம் அவங்க ஓய்வெடுத்துக்கிட்டே இருக்காங்க அதுவும் எப்படினா ஒரு சிலர் ஓய்வு எடுக்கும்போது இன்னொரு பக்கத்தில இருக்கவங்க வேட்டையாடுறாங்க அதே மாதிரி இவங்க ஓய்வு எடுக்கிறப்ப அடுத்த பக்கத்துல இருக்குறவங்க வேட்டையாடுறாங்க

நமக்கு எந்த பக்கத்தில் இருக்கிறவங்க வேட்டையாடுறாங்கன்னு தெரிஞ்சு போச்சுன்னா நம்ம அதுக்கு அடுத்த பக்கம் இருக்கிற பாதை வழியா தப்புச்சு வேற காட்டுக்கு போயிடலாம் அப்படின்னு சொன்னாரு

அதைக் கேட்ட மற்ற மிருகங்கள் கேலியா சிரிக்க ஆரம்பிச்சுச்சு இப்ப இருக்கிற பிரச்சனைல எந்த பக்கத்துல ஆபத்து இல்லைன்னு கண்டுபிடிக்கிறது தான் முக்கியமான விஷயம் அதை பத்தி நீங்க எதுவுமே சொல்ல மாட்றீங்க அது தெரியாம நம்மளால எந்த பக்கமும் போக முடியாது அப்படின்னு சொல்லுச்சுங்க அந்த காட்டு மிருகங்கள்

அப்பத்தான் ஒரு காது கேட்காத ரூபா நடுவில் வந்து நின்னுச்சு எனக்கு ஒரு காது கேட்காம இருக்கலாம் ஆனா தொலைதூரத்து சத்தங்கள் எனக்கு கேட்டுக்கிட்டே இருக்கு காலையில முழுவதும் இந்த இடது பக்கம் இருக்கிற காட்டுப்பகுதியில் துப்பாக்கி வச்சு சுடுறது என் காதுல கேட்குது துல்லியமா கேட்குது

அதே நேரத்துல பாறை மேலே ஏறி நின்று பார்க்கிறப்ப இந்த பக்கத்துல இருக்கவங்க ஓய்வெடுக்கிறது என்னோட மற்றொரு கண்ணுல தெரியுது ஏன்னா ஒரு கண்ணு எனக்கு இல்லாததுனால கடவுள் இன்னொரு கண்ணு ரொம்ப சக்தி மிகுந்ததாக கொடுத்திருக்கிறார். அப்படின்னு சொல்லுச்சு ரூபா

இதைக் கேட்ட எல்லா மிருகங்களும் ரொம்ப சந்தோசமாகிடுச்சுங்க உடனே நம்ம எல்லாரும் ரூபாவ பின்பற்றி தப்பிச்சு போயிடலாம்னு முடிவு செஞ்சுச்சுங்க மறுநாள் காலையில ரூபா ஒரு பாறை மேலே ஏறி நின்னு கூர்ந்து கவனிச்சுச்சு

அப்பத்தான் ரூபா சொல்லுச்சு இடது பக்கம் இருக்கிற வேட்டைக்காரங்க வேட்டையாடிக்கிட்டு இருக்காங்க அவங்களோட பேச்சு குரலும் துப்பாக்கியோட சத்தங்களும் எனக்கு துண்ணியமா கேட்குது அப்படின்னு சொல்லுச்சு

உடனே ரூபாவோட தாத்தா கேட்டார் வலது பக்கம் இருக்கிற வேட்டைக்காரங்க என்ன செய்றாங்க அப்படின்னு கேட்டாரு உடனே பாறையில் இருந்து அந்தப் பாறையை விட பெரிய பாறை மேலே ஏறி நின்னு ரூபா கூர்ந்து பார்த்துச்சு அங்க நிறைய வேட்டைக்காரங்க இருந்தாலும் அங்க இருக்கிறவங்க அதிக பேரு காவல் காக்காம தூங்கிட்டு இருக்கிறதையும்

இத காட்டு மிருகங்கள் கிட்ட சொன்ன ரூபா அவர்களை எல்லாம் கூட்டிக்கிட்டு மெதுவா வலது பக்கம் இருக்கிற பாதையில நடக்க ஆரம்பிச்சுச்சு அந்தப் பகுதியில இருக்கிற காவக்காரங்க எல்லாம் வேட்டைக்காரங்க எல்லாம் தூங்கிக்கிட்டு இருந்தாங்க அப்ப அங்க இருந்த காட்டு மிருகங்கள் எல்லாம் மெதுவா சத்தம் ஏதும் எழுப்பாம அவங்கள கடந்து காட்ட விட்டு வெளியே போயிடுச்சுங்க

கடவுள் தனக்கு குறைய கொடுத்துட்டாரு அப்படின்னு நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டே இருக்காம தன்னம்பிக்கைய கொஞ்சம் கொஞ்சமா வளர்த்துக்கிட்டு தங்களை எல்லாம் காப்பாற்றின குட்டி முயலான ரூபாவுக்கு எல்லாரும் நன்றி சொன்னாங்க அவங்க எல்லாம் புதுசா ஒரு காட்டுக்கு போயி ரொம்ப சந்தோசமா வாழ்ந்தாங்க

Exit mobile version