Site icon தமிழ் குழந்தை கதைகள்

அரசரை சந்தித்த முல்லா சிறுவர் கதை – Mulla Meets The Governor

அரசரை சந்தித்த முல்லா சிறுவர் கதை – Mulla Meets The Governor-முல்லா வாழ்ந்துகிட்டு இருந்த கிராமத்துல எப்பயும் அமைதி நிலவச்சு ஊருக்குள்ள ஏதாவது பஞ்சம், பட்டினி, சண்டை இது மாதிரி ஏற்பட்டுச்சுன்னா முல்லா தன்னால தீத்து வைக்க முடிந்த விஷயங்களை தீர்த்து வைப்பாரு 

அப்படி முடியாத விஷயங்கள காவல் அதிகாரி மூலமா அதட்டி உதட்டி பிரச்சனைகளை தீர்த்தாரு , அவராலயும் முடியாத அரசாங்க பிரச்சினையா இருந்துச்சுன்னா முல்லாவே பட்டணத்துக்கு போயி அரசு அதிகாரிகள சந்தித்து தன்னோட கிராமத்து பிரச்சனைகளை தீர்த்து வருவார்

அதுக்கு அப்புறம் முல்லா எப்ப பட்டணம் போயிட்டு வந்தாலும் முல்லா தங்களுக்காக ஏதாவது சலுகை வாங்கிட்டு வந்துருப்பாரு , தங்களுக்காக ஏதாவது அரசாங்கத்திடம் பேசிட்டு வந்திருப்பாரு அப்படின்னு பொதுமக்கள் நினைக்க ஆரம்பிச்சாங்க ஒவ்வொரு தடவை முல்லா பட்டணத்துக்கு வேற விஷயத்துக்கு போயிட்டு வந்தா கூட அவரை போட்டு தொந்தரவு பண்ணாங்க

முல்லா நீங்க அரசர தானே பார்த்துட்டு வந்து இருக்கீங்க இல்ல அமைச்சர பாத்தீங்களா காவல் அதிகாரிகளை பார்த்தீர்களா தளபதிய பார்த்தீங்களா அப்படின்னு சாரா மாறியா கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவாங்க ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பதில் சொல்ல முடியாத முல்லா இந்த தொல்லைக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைச்சாரு

இப்படி இருக்கப்பதன் ஒரு தடவ முல்லா தன்னோட நண்பரோட மகன் கல்யாணத்துக்கு பட்டணம் போனாரு முல்லா, திருமணம் நல்லபடியா முடிஞ்சதும் வீட்டுக்கு பயணமான முல்லா வர்ற வழி பூராம் ஊருக்கு போனா எல்லா வியாபாரிகளும் பொதுமக்களும் நம்மள போட்டு தொந்தரவு பண்ணுவாங்களே,

நம்ம இவ்வளவு தூரம் நடந்து வந்து திருமணத்த முடிச்சிட்டு சோர்வா போய்க்கிட்டு இருக்கோம்ம் இவங்களுக்கு எல்லாம் சமாளிச்சிட்டு எப்படி நம்ம போறதுக்கு இருட்டிரும் அப்படின்னு யோசிச்சுகிட்டே நடந்தாரு

அப்பத்தான் முல்லாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு இன்னைக்கு எல்லாரையும் ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் அப்படின்னு நேரா வீட்டுக்கு போகாம சந்தைக்கு வந்து எல்லாரும் இருக்குற இடத்துல ஒரு மேஜை மேடை மேலே ஏறி நின்று நான் பட்டணம் போயிட்டு வந்து இருக்கேன் என்கிட்ட எல்லாரும் எதுவும் கேட்கறீங்களா அப்படின்னு சத்தமா பேச ஆரம்பிச்சாரு

உடனே அடடா முல்லா பட்டணம் போயிட்டு வந்திருக்காரு நமக்கு ஏதாவது சலுகை வாங்கிட்டு வந்து இருப்பார் அப்படின்னு வேகமா ஓடி வந்த பொதுமக்கள் முல்லாமுல்லா நீங்க யாரை சந்திச்சீங்க அப்படின்னு கேட்டாங்க உடனே முல்லா சொன்னாரு நான் அரசரை சந்தித்தேன் அப்படின்னு சொன்னாரு அப்படியா அப்படின்னு எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க

உடனே முல்லா சொன்னாரு அவரே என்கிட்ட தனியா பேசுனாரு அப்படின்னு சொன்னாரு , இதை கேட்ட உடனே அங்கிருந்த எல்லாரும் ரொம்ப அவளாயிட்டாங்க உடனே முல்லா அரசர் என்ன சொன்னாங்க அப்படின்னு கேட்டாங்க “முட்டாப் பயலே ஓரமா ஒதுங்கி நில்லு குதிரை இடிச்சுட போது” அப்படின்னு சொன்னாரு அரசர் அப்படின்னு சொன்னாரு முல்லா

எல்லாருக்கும் குழப்பம் வந்துருச்சு, எதுக்கு முல்லா அவர் அப்படி சொன்னாரு அப்படினு கேட்டாங்க ,”அப்புறம் அவர் போற பாதையில முட்டாள் மாதிரி குறுக்க நின்னுகிட்டு இருந்தா அப்படிதான் திட்டுவாரு” அப்படினு சொன்னாரு முல்லா. இத கேட்ட எல்லாரும் சிரிச்சிட்டாங்க அப்ப அரசர் போற பாதைல குறுக்க போய் வசவு வாங்கிட்டு வந்திருக்கீங்க அதை சொல்லுங்க முதல்ல,நீங்க என்னமோ அரசாங்கத்தில ஏதோ காரியம் சாதிக்க போன மாதிரி நாங்க நினைச்சுகிட்டு இருக்கோம்

அப்பத்தான் முல்லா சொன்னாரு இப்ப புரியுதா ஒவ்வொரு தடவையும் நான் வெளியூர் போறது அரசாங்க காரியத்துக்குனு நினைச்சு என்னை போட்டு தொந்தரவு செய்யாதீங்க நான் என்னோட சொந்த விஷயத்துக்காக போயிட்டு வந்தா கூட ஒவ்வொருத்தருக்கு என்னால பதில் சொல்ல முடியல அப்படின்னு தெளிவா எடுத்துச் சொன்னாரு

அதுக்கப்புறம் அதிக பிரசங்கித்தனமா கேள்வி கேட்கிறத எல்லாரும் குறைச்சிக்கிட்டாங்க தன்னுடைய புத்திசாலித்தனத்தினால அடுத்தவங்களோட பிரச்சனைகளையும் அரசோட பிரச்சனையும் தீத்து வச்சுக்கிட்டு இருந்த முல்லா ,தன்னோட பிரச்சனைய இப்படித்தான் நகைச்சுவையா முடிச்சி வச்சுட்டாரு 

Exit mobile version