Site icon தமிழ் குழந்தை கதைகள்

விக்ரமாதித்தன் வேதாளம் கதை -1 அரசனும் கொள்ளிவாய் பேயும் – Vikram and Betal Story in Tamil

விக்ரமாதித்தன் வேதாளம் கதை -1 அரசனும் கொள்ளிவாய் பேயும் – Vikram and Betal Story in Tamil:- மாபெரும் அரசரான விக்கிரமாதித்தனுக்கு மக்களுக்கு தொந்தரவு கொடுக்குற வேதாளத்தை பிடித்து வர சொல்லி சொன்னாரு அவரோட குரு

புத்திசாலியான வேதாளத்தை பிடிச்சி தன்னோட தோளுல தூக்கிகிட்டே நடந்து வந்தாரு விக்ரமாதித்தன் , அப்ப அந்த வேதாளம் உன்கிட்ட இப்ப நான் ஒரு கேள்வி கேக்க போறேன் அதுக்கு நீ சரியான விடை சொல்லலைனா உன்னோட தலை நூறு துண்டா வெடிச்சி சிதறிடும் ,அதே நேரத்துல நீ வாய தொறந்து பேசுனா நா என்னோட இடத்துக்கு போய்டுவேன்னு சொல்லுச்சு

எப்படியாவது வேதாளத்தை கொண்டுவந்து தனிடிக்கணும்னு யோசிச்ச விக்ரமாதித்தன் அமைதியா அந்த வேதாளத்தை தன்னோட தோளுல தூக்கிகிட்டே நடக்க ஆரம்பிச்சாரு

அப்ப அந்த வேதாளம் கதை சொல்ல ஆரம்பிச்சுச்சு , ஒரு ஊருல பாட்சானு ஒரு அரசர் இருந்தாரு அவரு தன்னோட நாட்ட ரொம்ப நல்லபடியா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு

அவருக்கு அக்னினு ஒரு பையன் இருந்தான் அவன் அரசரான பாட்சா மாதிரி இல்லாம திறமை இல்லாததவனா இருந்தான் , தனக்கு அப்புறம் தன்னோட மகன் ஆட்சிக்கு வர்றது பாட்ஸாவுக்கு பிடிக்கல

ஒருநாள் அரசவைக்கு வந்த அக்கினி தந்தான் இனிமே இந்த நாட்டோட அரசனு சொன்னான் ,வேற வழி இல்லாம பாட்சா தன்னோட நாட்ட அவன்கிட்ட ஒப்படைச்சிட்டு காட்டுக்கு போனாரு

அப்படி போகுறப்ப ஒரு வயசான கிழவி அழுதுகிட்டு இருக்குறத பார்த்தாரு ,உடனே அவுங்க கிட்ட போன அரசர் ஏ அழுதுகிட்டு இருக்கீங்கன்னு கேட்டாரு ,

அதுக்கு அந்த கிழவி சொல்லுச்சு இங்க ஒரு கொள்ளிவாய் பேய் இருக்கு அதோட வால என் மகன் மிதிச்சிட்டன் அதனால இன்னைக்கு ராத்திரி அவனை பிடிச்சி திங்க போகுதுனு சொன்னாங்க

இத கேட்ட அரசர் சொன்னாரு அந்த கொள்ளிவாய் பேய் இன்னைக்கு வந்தா உங்க மகனுக்கு பதிலா என்ன அதுகிட்ட ஒப்படைக்கிறேன்னு சொன்னாறு

இத கேட்ட அந்த கிழவி சந்தோச பட்டாலும் தனக்காக இன்னொருத்தர் சாக வேணாம்னு சொன்னாங்க ,அன்னைக்கு ராத்திரி அந்த கொள்ளிவாய் பேய் வந்ததும் அதுகிட்ட அந்த பையன விட்டுட்டு என்ன தின்னுக்கொன்னு சொன்னாரு அத கேட்ட கொள்ளிவாய் பேயும் அந்த பையன விட்டுட்டு அரசரை பிடிச்சி தின்னுடுச்சு

— இந்த அரசரோட தியாகத்தை பத்தி என்ன நினைக்கிற விக்ரமா தித்தானு கேட்டுச்சு வேதாளம்

இதுல எந்த தியாகமும் எனக்கு தெரியல , தன்னோட உதவாக்கரை மகன் கிட்ட தன்னோட நாட்ட ஒப்படைச்சு தன்னோட மக்கள் எல்லாம் கஷ்ட பட போறாங்கன்னு தெரிஞ்சு வருத்தப்பட்டு ,அந்த கொள்ளிவாய் பேய் கிட்ட போய் சேர்ந்ததாதான் நான் பாக்குறேனு சொன்னாரு

சரியான விடை – அரசனான பாட்சா நாட்டு மக்களை முன்னிருந்து தான்னோட மகனுக்கு அரச கொடுக்காம இருந்திருக்கணும் ,அதுதான் அவரோட கடமை ,புத்திசாலியான நீ சொன்ன விடை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஆனா நீ வாய தொறந்து பேசிட்டதால நான் இன்னைக்கு என்னோட புளிய மரத்துக்கு போறேன் முடிஞ்சா என்ன திரும்பவும் புடினு சொல்லிட்டு பறந்து போய்டுச்சு

Exit mobile version