Site icon தமிழ் குழந்தை கதைகள்

ரோஜா செடியில் தேன் – சிறுவர் கதை -The Boy and the Rose Bee

ரோஜா செடியில் தேன் – சிறுவர் கதை -The Boy and the Rose Bee:-ஒரு மிக பெரிய மலையில இருக்குற காட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன கிராமம் இருந்துச்சு

அந்த கிராமத்துல ஒரு வயசான தாத்தாவும் அவரோட குட்டி பேரனும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க.

அந்த கிராமத்துல இருக்குறவங்க எல்லாரும் காட்டுக்குள்ள போயி மிருகங்கள வேட்டையாடி சாப்பிட்டு உயிர் வாழ்ந்துகிட்டு வந்தாங்க

அவுங்க வாழுற இடம் மேடு பள்ளம் நிறைஞ்ச மலை பகுதிக்கிறதுனால விவசாயம் செய்ய போதுமான நிலம் அவுங்களுக்கு கிடைக்கல ,

அதனால வேட்டையாடினா மட்டும்தான் அவுங்களுக்கு உணவு கிடைக்கும்கிற நிலைமை இருந்துச்சு

அப்பத்தான் அந்த மலைக்கு அடியில இருந்த கிராமத்துல ஒரு மிக பெரிய திருவிழா நடக்கிறதா இருந்துச்சு ,அதுக்கு இந்த மலை கிராமத்துல இருந்த எல்லாரும் போனாங்க

அந்த குட்டி பையனும் அவனோட தாத்தாவும் கூடவே திருவிழாவுக்கு போனாங்க ,அப்படி போகுறப்ப அந்த குட்டி பையன் ஒரு ரோஜா செடிய பார்த்தான்

மலையில இந்த மாதிரி ரோஜா செடிய பார்க்காம இருந்த அந்த பையனுக்கு அந்த ரோஜா ரொம்ப அழகா தெரிஞ்சுச்சு

உடனே அந்த ரோஜா செடியை தன்னோட எடுத்துட்டு போகணும்னு அவுங்க தாத்தாகிட்ட சொன்னான் ,உடனே அந்த தாத்தா ஒரு சட்டியில் நிறய மண் அள்ளி அதுகுள்ள அந்த ரோஜா செடிய வச்சு எடுத்துகிட்டான்.

திருவிழா நடந்து முடிஞ்சதும் எல்லாரும் தங்களோட மலை கிராமத்துக்கு போனான் , ரோஜா செடியை தன்னோட எடுத்துட்டு வந்த அந்த பையன் தன்னோட வீட்டுக்கு வெளியிலேயே நட்டுவச்சான்

கொஞ்சம் நாளுக்கு அப்புறம் ரோஜா செடி பெருசா வளந்துச்சு ,அத பதியம்போட்டு நிறைய செடி வச்சு நிறைய ரோஜாச்செடி வளர்க்க ஆரம்பிச்சான்

அப்படிதான் ஒருநாள் அந்த ரோஜா செடியால ஒரு பூச்சி இருக்குறத பார்த்தான் அந்த பையன் அத பிடிச்சி அடிக்க பார்த்தான் அந்த பையன் ஆனா அந்த பூச்சி அவன் கையில கொட்டிடுச்சு வலி தங்க முடியாத அந்த பையன் தன்னோட தாத்தாகிட்ட போய் சொன்னான்

அந்த பூச்சிய பார்த்த அந்த தாத்தா சொன்னாரு இது தேன் ஈ இது பூவுல இருக்குற தேன எடுத்து சேமிச்சு வைக்கும் அது ரொம்ப நல்ல மருந்துனு சொன்னாரு ,உடனே அந்த ரோஜா தோட்டத்துக்கு பக்கத்துல ஒரு பெட்டி செஞ்சு வச்சான்

அதுல நிறய தேனீ வந்து வாசிக்க ஆரம்பிச்சுச்சு ,கொஞ்ச காலத்தில அந்த பெட்டியில நிறய தேன் சேமிக்க ஆரம்பிச்சுச்சு அந்த தேனீக்கள்

அளவுக்கு அதிகமா பெருகிப்போன தேனீக்கள் அந்த கிராமத்துல இருக்குற செடிகள் எல்லாத்துலயும் தேன் எடுக்க போச்சுங்க ,அப்ப அங்க இருந்த குழந்தைகள் சிலரை கொட்டிடுச்சுங்க

அதனால கோபமான கிராமத்து காரங்க அந்த தாத்தா கிட்ட வந்து சண்ட போட்டாங்க

அப்பத்தான் ஒருநாள் அந்த கிராமத்துல இருக்கிறவங்களுக்கு மிக பெரிய தொற்றுநோய் வர ஆரம்பிச்சுச்சு ,காட்டுல மூலிகைகள வச்சு வைத்தியம் பார்த்தும் எல்லாருக்கும் குணமாகவே இல்ல

நோய் வர ஆரம்பிச்சதும் அந்த கிராமத்தை சேர்ந்தவங்க வேட்டைக்கு சரியா போக முடியல அதனால நிறய வீட்டுல பட்டினி இருந்தாங்க

இத கேட்ட அந்த பையனுக்கு மூலிகை மருந்தோட தேன் கலந்து தன்னோட கிராமத்துல இருக்குற எல்லாருக்கும் வைத்தியம் செய்ய பயன்படும்னு நினைச்சான்

அந்த தேன் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து தன்னோட தாத்தா கிட்ட கொடுத்தான் ,அத எடுத்து மருந்தோட கலக்கி கிராமத்துல இருக்குற எல்லாருக்கும் வைத்தியம் செஞ்சாரு அந்த தாத்தா

தேன் கலந்த மூலிகை மருந்து அந்த கிராமத்துல இருந்தவர்களுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி கொடுத்துச்சு ,அதனால எல்லாரும் மறுபடியும் திடகாத்திரமா மாறுங்க ,எல்லாரும் மீண்டும் காட்டுக்கு வேட்டைக்கு போனாங்க

அவசர பட்டு அந்த தாத்தா கிட்ட சண்ட போட்டதும் எல்லாரும் ரொம்ப வறுத்த பட்டாங்க ,அதனால அந்த தாத்தா கிட்ட வந்து மன்னிப்பு கேட்டாங்க

Exit mobile version