Site icon தமிழ் குழந்தை கதைகள்

முள்ளம் பன்றியின் முட்கள்-The Porcupines’ Sacrifice: Trading Beauty for Protection in the Enchanted Forest

முள்ளம் பன்றியின் முட்கள்-The Porcupines’ Sacrifice: Trading Beauty for Protection in the Enchanted Forest:-முன்னாடி ஒரு காலத்துல காட்டுக்குள்ள நிறைய மிருகங்கள் இருந்துச்சு, அந்த காலத்துல முள்ளம்பன்றி முதுகுல முட்கள் எதுவுமே இல்லாம இருந்துச்சு அப்ப முள்ளம்பன்றிகள் பார்க்கிறதுக்கு ரொம்ப அழகா இருந்துச்சு அதனாலேயே தலக்கணம் ஏறி போயி காட்டுல இருக்கிற மத்த மிருகங்களை வம்பு இழுத்துக்கிட்டு இருந்துச்சுங்க

பாதுகாப்புக்காக ஒவ்வொரு மிருகத்துக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிற மாதிரி முள்ளம்பன்றிக்குன்னு எதுவுமே இல்லாம இருந்துச்சு, தான் ரொம்ப அழகா இருக்கோம் அப்படிங்கற ஆணவத்தினால காட்டுக்குள்ள கண்டமேனிக்கு சுத்த ஆரம்பிச்சு முள்ளம்பன்றி அதுங்களோட அழகே அவங்களுக்கு ஆபத்தா முடிஞ்சிடுச்சு எப்ப பாத்தாலும் ஏதாவது ஒரு காட்டு மிருகம் முள்ளம்பன்றிகள பிடிச்சு சாப்பிட்டுகிட்டே இருந்துச்சுங்க

அப்பத்தான் முள்ளம்பன்றிகளோட கூட்டம் கடவுளை வேண்டுனாங்க கடவுளே எங்களுக்கு எல்லா மிருகங்களை விட கூடுதலா அழக கொடுத்து இருக்கீங்க அதே மாதிரி எங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கிறதுக்கு ஏதாவது குடுங்க அப்படின்னு கேட்டுச்சுங்க

மனம் உருகி வேண்டுற எல்லாருக்கும் கடவுள் ஏதாவது ஒரு வகையில உதவி செய்வார் என அது நம்பிச்சு ஆனா அதோட பிரார்த்தனை மட்டும் எப்பவும் நிறைவேறாம இருக்கிறத ரொம்ப நாள் பார்த்து வருத்தப்பட்டுக்கிட்டே இருந்துச்சுங்க எல்லாம் முள்ளம்பன்றிகளும்

அப்பத்தான் ஒரு சாமியார் கரடி காட்டுக்குள்ள புதுசா வந்திருக்கிறத பார்த்துச்சுங்க முள்ளம்பன்றிங்க உடனே சாமியார் கரடி கிட்ட போன முள்ளம்பன்றீங்க தங்களுக்கு பாதுகாப்பான உடல் வேணும் இத நாங்க கடவுள்கிட்ட எவ்வளவு தடவை வேண்டி கேட்டுக்கிட்டாலும் எங்களுக்கு கிடைக்க மாட்டுது அப்படின்னு சொல்லுச்சு அப்பத்தான் கரடி சாமியார் சொன்னாரு நீங்க வேண்டுறது எல்லாம் நல்லாத்தான் வேண்டுறீங்க ஆனா உங்க இதுல எதை நீங்க தியாகம் பண்றீங்களா அதுக்கு ஏத்த பலன் உங்களுக்கு கிடைக்கும் அப்படின்னு சொல்லுச்சு

அப்பத்தான் எங்களுக்கு இருக்கிற உடல் அழகை கூட எடுத்துக்க சொல்லுங்க அதுக்கு பதிலா எங்களுக்கு பாதுகாப்பு குடுங்க அப்படின்னு வேண்ட ஆரம்பிச்சுசுங்க எல்லா முள்ளம்பன்றிகளும் அப்பத்தான் முள்ளம்பன்றியோட வேண்டுதல் பளிக்க ஆரம்பிச்சுருச்சு அன்னையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா முள்ளம்பன்றியோட உடம்பு முழுசும் முட்கள் வளர ஆரம்பிச்சு

முட்கள் நல்லா வளர்ந்து பாதுகாப்பு அரணா முள்ளம்பன்றிகளுக்கு மாறிடுச்சு அதுக்கப்புறம் அதை பிடிச்சு திங்க வர காட்டு மிருகங்களால அதுங்கள பிடிக்க முடியல அப்படி பிடிக்க முயன்ற போதும் முள்ளம்பன்றியோட முட்கள் குத்தி அவங்க தான் காயம் பட்டுச்சுங்க அதுக்கப்புறம் கடவுள் தங்களுக்கு கொடுத்த புது வரத்தை வச்சு நல்லபடியா வாழ்ந்துச்சுங்க முள்ளம்பன்றிங்க

முள்ளம்பன்றிக்கு ஏன் முட்கள் இருக்குனு நம்ம வெப்சைட்லயே நிறைய கதை இருக்கு அதையும் தேடி படிச்சு பாருங்க அது இதைவிட ரொம்ப நகைச்சுவையா இருக்கும்

Exit mobile version