பெரிய முதலையும் குட்டி தவளையும்-Brains vs Brawn: The Frog’s Revenge:-பெரிய பெரிய மரங்கள் இருக்கின்ற குவா காட்டுல ஒரு மிகப்பெரிய குளம் இருந்துச்சு அந்த குளத்துல நிறைய நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அங்கதான் ஒரு மிகப்பெரிய முதலை ஒன்னு வாழ்ந்துகிட்டு வந்துச்சு
அது ரொம்ப பெருசா இருக்கிறதுனால அந்த குளத்துல வாழ்ந்த மற்ற நீர்வாழ் உயிரினங்களை தொந்தரவு செஞ்சுக்கிட்டே இருந்துச்சு அப்படி இருக்கப்த்தா அங்க வாழ்ந்துகிட்டு இருந்த தவளை கூட்டத்தில் ஒரு குட்டி தவளையை ஒரு நாள் பார்த்துச்சு அந்த பெரிய முதலைய
தாமரை இலை மேல உக்காந்து ஓய்வு எடுத்துக்கிட்டு இருந்துச்சு அந்த குட்டிக் தவளை அதை பார்த்த பெரிய முதலை தன்னோட வால சுழற்றி தண்ணியில ஒரு அடி அடிச்சுச்சு உடனே எழுந்த சூழலில் தாமரையிலையோடு சேர்த்து மேல பறந்துச்சு தவளை அதிர்ச்சியில பறந்த தவளை தரையில விழுந்து அடிபட்டு கிடச்சு
கோபத்தோட எந்திரிச்சு முதலைய பார்த்த தவளை ஏன் இப்படி செய்றீங்க நீங்க வேணா இந்த குளத்திலேயே பலசாலியா இருக்கலாம் ஆனா எங்களுக்கும் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு உரிமை இருக்கு இந்த குளத்தோட தண்ணிய நீங்க மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது அப்படின்னு சொல்லுச்சு இதை எதையுமே கேட்காம கலகலன்னு சிரிச்ச அந்த பெரிய முதல திரும்பவும் தண்ணிய தவளை மேல அடிச்சு விட்டுச்சு
குட்டித்தவளைக்கு கோபம் வந்தாலும் அதோடு நிலைமையையும் இயலாமையயும் புரிஞ்சு கிட்டு இருந்துச்சு அதனால ஒன்னும் பேசாம அங்க இருந்து போயிடுச்சு இதை எல்லாம் பார்த்துக்கிட்டே இருந்துச்சு பக்கத்து மரத்துல உட்கார்ந்திருந்த ஒரு காக்கா
மறுநாள் காலையில குளத்தோரத்துல நடந்து போய்க்கிட்டு இருந்த குட்டி தவளை கிட்ட வந்த காக்கா உன்னாலையோ என்னாலையோ உடல் வலிமையை வச்சு அந்த பெரிய முதலைக்கு பாடம் கற்றுக் கொடுக்க முடியாது ஆனால் ஒரு சின்ன யோசனை புத்திசாலித்தனமா செஞ்சமுனா அந்த பெரிய முதலைய நம்ம வழிக்கு கொண்டு வரலாம் அப்படின்னு சொல்லுச்சு காக்கா
இத கேட்ட குட்டி தவளை ரொம்ப உற்சாகமா மாறிடுச்சு என்ன காக்க யாரு சொல்லுறீங்க இவ்வளவு சின்னதா இருக்கிற நம்ம எப்படி அவ்வளவு பெரிய முதலையே எதிர்கொள்கிறது அப்படின்னு சொல்லி கேட்டுச்சு குட்டி தவளை அப்பத்தான் காக்கா சொல்லுச்சு அங்க பார்த்தியா தாமரை இலை அது தண்ணியில ஒட்டாம எப்படி மிதக்குது பாத்தியா அப்படின்னு கேட்டுச்சு
தாமரை இலை தண்ணியில ஒட்டாது என்று எனக்கும் தெரியும் அதனால என்ன இப்ப அப்படின்னு கேட்டுச்சு இப்பதான் காக்கா சொல்லுச்சு முதலைகள் தண்ணிக்குள்ளையும் தண்ணிக்கு வெளியிலயும் வாழக்கூடிய உயிரினம் அதனால தண்ணிக்குள்ள போயிட்டு வெளியில் வருவது அன்றாடம் நடக்கிறது தான் ,
நம்ம அந்த தாமரை இலையை துண்டு துண்டா வெட்டி குளம் முழுசும் மிதைக்க விடுவோம் அப்படி மிதக்கிற குட்டி குட்டி தாமரை இலை துண்டுகள்ல நான் கொண்டு வந்து கொடுக்கிற மிளகாய் பொடியை தூவி விட்டுருவோம்
அதுக்கு அப்புறம் ஒவ்வொரு தடவை அந்தப் பெரிய முதலை தண்ணிக்குள்ள இருந்து வெளியே வரும்போது எல்லாம் அதோட முகத்தில் படும் மிளகாய் பொடி கண்ணுல பட்டால் எப்படி எரியும் உனக்கு தெரியுமா அப்படின்னு கேட்டுச்சு அப்பத்தான் குட்டி தவளை இது நல்ல யோசனையா இருக்கு அப்படின்னு சொல்லுச்சு
மறுநாள் காலையில திட்டம் தீட்டுனபடியே தாமரை இலைகளை துண்டு துண்டா தன்னோட குட்டி பல்லால கடிச்சு மிதக்க விட்டுச்சு குட்டி தவளை அருகில் இருக்கிற கிராமத்துக்கு போயி நிறைய மிளகாய் பொடிகளை எடுத்துட்டு வந்த காக்கா ஒவ்வொரு தாமரைகளை துண்டுகள் மேலயும் கொஞ்சம் கொஞ்சம் தூவிச்சு
மிளகாய் பொடித்தூவுன தாமரை இலை துண்டுகள் குளம்முழுசும் மிதக்க ஆரம்பிச்சுச்சு இது தெரியாம தண்ணிக்குள்ள இருந்து வெளியே வந்த பெரிய முதல இதோட முகத்தில் மிளகாய் பொடி எல்லாம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு தண்ணிக்குள்ளேயே வாழ்ந்துகிட்டு இருந்த முதலயோட முகத்துல மிளகாய் பொடி பட்டதும் ரொம்ப துடிதுடிச்சு போச்சு கரையில வந்து அங்கிட்டு இங்கிட்டும் பிரண்டுச்சு அந்த பெரிய முதலை
இப்பத்தான் அங்க நின்னுகிட்டு இருந்த காக்கையையும் குட்டி தவளையும் பார்த்துச்சு பெரிய முதல ஓ இது எல்லாம் உங்களுடைய வேலை தானா அப்படின்னு கோபமா கேட்டுச்சு பெரிய முதல அப்பத்தான் குட்டி தவளை சொல்லுச்சு சின்னஞ்சிறு உயிரினங்களான எங்கள வதைச்ச உனக்கு இதுதான் சரியான தண்டனை
இனியும் எங்கள தொந்தரவு செஞ்சுக்கிட்டே இருந்தேனா உன்னோட கண் பார்வையை பறிக்கிற அளவுக்கு இந்த காட்டுல விஷச் செடிகள் நிறைய இருக்கு அதுல எதையாவது கொண்டு வந்து உன் கண்ணுல படுற மாதிரி போட்டு விட்டுருவோம் அப்படின்னு சொல்லுச்சு குட்டி தவளை
மத்த உயிரினங்களோட சண்டை போட்டு தன்னுடைய வாழ்க்கையை அழிச்சுக்க கூடாது அப்படின்னு நினைச்ச பெரிய முதலை அன்னையிலிருந்து தன்னோட வழியில அமைதியான வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுச்சு புத்திமான் பலவான் அப்படிங்கற பாக்கியத்துக்கு சான்றா இந்த கதை இருக்கு
