Site icon தமிழ் குழந்தை கதைகள்

புதிய அறிவியல் விவசாயம் – Modern Agriculture

machine harvest

Photo by Mark Stebnicki on Pexels.com

புதிய அறிவியல் விவசாயம் – Modern Agriculture :-இந்திய நாட்டின் விவசாயம் என்பது மொத்த பொருளாதாரத்தில் 18% ஜிடிபி பூர்த்தி செய்கிறது .வளர்ந்துவரும் தற்கால அறிவியல் சூழ்நிலையில் விவசாயமும் தன் பங்கிற்கு வளரத்தான் செய்துள்ளது. விவசாய கருவிகள் மட்டுமல்லாது விவசாய பொருட்களும் அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளன பயோ டெக்னாலஜி மற்றும் டெக்னாலஜி போன்ற பொறியியல் துணை கொண்டு இன்றைய இந்திய விவசாயம் புதிய தொழில்நுட்ப பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

Photo by Quang Nguyen Vinh on Pexels.com

 புதுமை விவசாய கருவி 

 டிராக்டர் மட்டுமே அறிவியல் சாதனமாக விவசாய தொழிலில் ஈடுபட்ட வந்த காலம் சென்றுவிட்டது. தற்காலங்களில் விதை விதைப்பது முதல் அறுவடை செய்து முடிக்கும் வரை புதிய புதிய கண்டுபிடிப்புகளும் புதிய கருவிகளும் விவசாயத்திற்கு பயன்பட்டு வருகின்றன. ஒவ்வொரு செயலையும் செய்ய தனிமனித ஆற்றலுக்கு மேலாக தானியங்கி பொறியியல் கருவிகள் மூலம் அதிக அளவு விவசாய உற்பத்தி தற்போது நடைபெற்று வருகிறது. விவசாய கூலி தொழிலாளர்கள் சிலரைக் கொண்டு குறைந்த செலவில் புதிய கருவிகளை பயன்படுத்தி விவசாய பணிகளை செய்து முடிக்க முடிகிறது. அதுமட்டுமல்லாது துல்லியமாக விவசாயப் பொருட்களை பிரித்து எடுத்தல் விவசாய இடுபொருட்களை முறையான செயல் மூலமாக விதைத்தல். போன்றவற்றிற்கு புதிய புதிய கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன

வருடம் முழுவதும் விவசாயம்

 புதிய அறிவியல் விவசாயத்தை பின்பற்றுவதன் மூலமாக வருடத்தில் சில காலங்கள் மட்டுமே விதைத்து அறுவடை செய்யக்கூடிய சீசன் விவசாய பொருட்களை வருடம் முழுவதும் அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது. பிளாஸ்டிக் குடில்கள் அமைத்து பூ மற்றும் பழங்களை வருடம் முழுவதும் விளைவிக்கும் வகை பின்பற்று வந்த காலம் தொட்டு தற்சமயம் வெளிநாடுகளில் அவர்கள் காலநிலைக்கு ஏற்ற பயிர்களை எந்த ஒரு இடத்திலும் விளைவிக்கும் புதிய அறிவியல் குடில்கள் அமைக்க தொடங்கப்பட்டு விட்டன. இதன் காரணமாக அண்டை நாடுகளில் இருந்து விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வது குறைந்து நேரடியாக விவசாய குடில்கள் மூலமாக குறைந்த செலவில் நமக்கு தேவையானவற்றை இங்கே பயிர் செய்து கொள்ள முடிகிறது எடுத்துக்காட்டாக வெளிநாடுகளில் பயிரிடப்பட்டு வந்த ஸ்ட்ராபெரி பழம் தற்சமயம் இந்திய சந்தைகளில் அதிகம் இடம் பெறுவதை காணலாம்

 விதைகளில் புதுமை

 விதையில் இருந்து வெளிப்படும் செடிகளை ஒட்டு முறை கொண்டு நல்லவர்களாக பிரித்து எடுத்த முந்தைய காலங்களில் தொடர்ச்சியாக தற்கால அறிவியல் விவசாயத்தில் விவசாயத்தின் ஆணிவேரான விதைகளையே மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் பரவத் தொடங்கி நீண்ட நாட்கள் ஆகின்றன. மரங்களில் வளரும் காய்கறிகள் இவ்வகை விதைகள் மூலமாக சிறுசெடி களிலேயே அறுவடையை தொடங்கிவிடும். விதை விதைத்து வருடங்கள் காத்திருந்து விளைபொருட்களை அறுவடை செய்யும் காலம் மலையேறிவிட்டது தற்போது 90 நாட்களுக்குள் விவசாய பொருட்களை நாம் கண்கூடாக காண முடிகிறது

Exit mobile version