Site icon தமிழ் குழந்தை கதைகள்

பாம்பின் கால்கள் சிறுவர் கதைகள் படத்துடன் -The Snake Who Lost Its Legs

பாம்பின் கால்கள் சிறுவர் கதைகள் படத்துடன் -The Snake Who Lost Its Legs :-உலகம் உருவான பிறகு ஒவ்வொரு மிருகங்களும் அதுகளோட தேவைக்கேற்ப பரிணாம வளர்ச்சியில் தங்களை மேம்படுத்தி கிட்டே இருந்ததுங்க , அவங்களோட தேவை என்னவோ அதுக்கு ஏத்த மாதிரி அவங்களோட உடலும் மாறிக்கிட்டே வந்துச்சு,

அப்படித்தான் வேகமா ஓடுற கால்கள் மான்களுக்கும், அதிக எடை சுமக்கிற முதுகு கழுதைகளுக்கும் தங்களை பாதுகாப்பா வச்சிக்கிற ஓடு ஆமைகளுக்கும் தூரத்துல வர்ற ஓசையை கேட்டு சுலபமா காட்டு மிருகங்களிடம் தப்பிச்சுக்கற காது முயல்களுக்கும் பரிணாம வளர்ச்சியில தான் வந்துச்சு

உலகம் தோன்றியதற்கு அப்புறம் பாலைவனம் உருவாக ஆரம்பிச்சிருச்சு அதுவரைக்கும் காட்டுப் பகுதியில் ஜில்லுனு வாழ்ந்துகிட்டு இருக்க மிருகங்கள் எல்லாம் புதுசா உருவாகுற பாலைவனத்தைக் கடந்து அந்த பக்கம் இருக்கிற நீர்நிலைகள் பக்கம் போக ஆரம்பிசுச்சுங்க ,அங்க இருந்த பறவைகள் எல்லாம் சுலபமா பறந்து போயிருச்சுங்க

மான் மாதிரி இருந்த ஒட்டகம் கொஞ்சம் கொஞ்சமா தன்னோட உடல மாத்திக்கிட்டு பாலைவனத்தைக் கடந்து எப்படிப்பட்ட வெயிலையும் சமாளிக்கிற அளவுக்கு கொஞ்சம் தண்ணீர் குடிச்சிட்டு அதிக தூரம் நடக்கிற அளவுக்கு தன்னோட உடம்பு மாத்திக்கிட்டு பாலைவனத்தை கடந்துச்சு

அந்தக் காலத்துல பாம்புகளுக்கு நிறைய கால்கள் இருந்துச்சு ஆனா அதுக்கு எல்லாம் ரொம்ப சோம்பேறித்தனம் பட்டுச்சு எல்லா மிருகங்களையும் பாலைவனத்தை கடந்து அந்த பக்கம் இருக்கிற நீர்நிலைகளுக்கு போச்சு அப்படி போக விரும்பாத மிருகங்கள் பஞ்சகாலங்களில் தங்கள் உடம்ப கட்டுக்குள் வைத்து வாழ்ந்துக்கிட்டே இருந்துச்சுங்க

பாம்புகள் மட்டும் ரெட்டை மனசோட பாலைவனத்தை கடக்க ஆரம்பித்துவிட்டது அப்படி போறப்ப அதுங்களுக்கு இருந்த நிறைய கால் சுட ஆரம்பிச்சதும் தன்னோட கால்களை வேணாம்னு நினைச்சுக்கிட்டே பாலைவனத்தை கடக்க ஆரம்பிச்சுச்சுங்க ,நிறைய பாம்புகள் தங்களோட முயற்சியை விட்டு பலவனத்தையே தங்களோட இருப்பிடமா மாத்திகிடுச்சுங்க ,

அப்படி பாலைவனத்துல வாழ ஆரம்பிச்ச பிறகு தலைமுறை ஆக ஆக ஒவ்வொரு பாலைவனத்துல வாழ்ந்த பாம்புகளுக்கு கால் ஒவ்வொண்ணா குறைந்து கடைசில பாம்புகளுக்கு காலே இல்லாமல் போயிடுச்சு

அதனால கால்கள் இல்லாததுனால சுலப மணல்களுக்குள்ள புதைந்து வெயில் இருந்து தப்பிச்சுக்களும் அவர்களால் முடிஞ்சிடுச்சு ,கால்களை எல்லாம் இழந்த பாம்பு சில வளைந்து நெளிஞ்சு தன்னுடைய பயணத்தை செஞ்சுச்சு அதுங்கதா காட்டுக்குள்ள வந்த பாம்புகள் அதுவே பின்னாடி அதோட உடலாலும் மாறிப்போச்சு


பாம்புக்கு கால் ஏன் இல்லை? குழந்தைகளுக்கான சின்ன விளக்கம்

பாம்புக்கு கால் இல்லாததற்கு உண்மையான அறிவியல் காரணம் இதுதான் – இது எவல்யூஷன் (பரிணாம வளர்ச்சி) என்று சொல்றோம்

நீண்ட நாளுக்கு முன்னாடி (1.5 லட்சம் வருஷத்துக்கு முன்னாடி) பாம்போட முன்னோடிகள் பல்லி மாதிரி 4 கால் உள்ளவங்களா இருந்தாங்க . அப்போ சில பல்லிகள் மண்ணுக்குள்ள குழி தோண்டி வாழ ஆரம்பிச்சாங்க. குழிக்குள்ள போகும்போது 4 காலும் தடங்கலா இருந்துச்சு. கால் இல்லாதவங்க (அல்லது ரொம்ப சின்ன கால் உள்ளவங்க) சுலபமா உள்ள போய், உணவு பிடிச்சு, எதிரியை தப்பிச்சு, அதிக குழந்தை பெத்தாங்க.

அப்படியே தலைமுறை தலைமுறையா கால் சின்னதாகி, சின்னதாகி, கடைசியா முழுக்க மறைஞ்சு போயிடுச்சு. இதைத்தான் “நேச்சுரல் செலக்ஷன்” (இயற்கை தேர்வு) னு சொல்றாங்க – சூழலுக்கு ஏத்தவங்க மட்டும் தப்பி வாழ்ந்தாங்க

அறிவியல் ஆதாரம் என்ன தெரியுமா? பழைய எலும்புகள் (பாஸில்) கிடைச்சிருக்கு – அதுல சின்ன கால் இருந்த பாம்பு எலும்பு இருக்கு! இப்போ பைத்தான், போவா பாம்புல சின்ன சின்ன “கால் தடம்” உள்ளே மறைஞ்சு இருக்கு – அது பழைய கால் நினைவு

DNAல என்ன ஆச்சு? “சானிக் ஹெட்ஜ்ஹாக்” னு ஒரு ஜீன் இருக்கு. அந்த ஜீன் “ஆன்” ஆகாம போயிடுச்சு. அதனால கால் வளரலை

இப்போ கால் இல்லாததால பாம்பு ரொம்ப வேகமா நெளிஞ்சு போகுது, மண்ணுக்குள்ள போகுது, மரம் ஏறுது, தண்ணில நீந்துது, எதிரியை ஏமாத்துது. கால் இருந்தா இவ்வளவு சூப்பரா இருக்க முடியாது!

குழந்தைகளுக்கு இப்போ புரிஞ்சுதா? கால் இல்லாதது தண்டனை இல்லை – அது பாம்புக்கு கொடுத்த சூப்பர் பவர்தான்!

Exit mobile version