Site icon தமிழ் குழந்தை கதைகள்

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து -Why Do Giraffes Have Long Necks?

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து -Why Do Giraffes Have Long Necks?:-கடவுள் உலகத்தை படைச்ச பிறகு மனிதன படைச்சாரு மனிதனுக்கு அடுத்தபடியா மிருகங்களை படைச்சாரு அப்படி படைக்கிறப்ப முதல்ல ஒட்டகச்சிவிங்கி குட்டையான கழுத்தோட தான் இருந்துச்சு

ஒவ்வொரு மிருகங்களா படைச்ச பிறகு அதுகளுக்கான உணவு எது வாழ்நாள் எவ்வளவு அதோட திறமைகள் என்னென்ன அப்படின்னு பகுத்து ஆராய்ந்து கொடுத்திருந்தார் கடவுள் அதை வாங்கின எல்லாம் மிருகங்களும் சந்தோசமா வாழ ஆரம்பிச்சுடுச்சுங்க

ஒட்டகச்சிவிங்கிக்கு இலை தழைகள் சாப்பிட்டு வாழனும் அப்படின்னு விதி விதிக்கப்பட்டு இருந்துச்சு ஆனால் ஒட்டகச்சிவிங்கி குரங்குகள் சாப்பிட்டு பசியாராவே படைக்க பட்ட பழத்த குரங்கு சாப்புடறத பார்த்ததும்,ஒட்டகச்சிவிங்கிக்கு அதோட நாக்க கட்டு படுத்த முடியல ,என்ன ஆனாலும் சரி கடவுள் தண்டிச்சாலும் பரவா இல்லனு தானும் பழத்த திருடி தின்ன ஆரம்பிச்சுச்சு ஒட்டகச்சிவிங்கி

கடவுள் குரங்குக்கு படைக்க பட்ட உணவ சாப்பிடுறத எப்படிம் கண்டுபிடித்துவிடுவார் தன்னோட திருட்டுத்துக்கு எப்படி பட்ட தண்டனை கிடைக்கும் அப்படினு ஒரு சின்ன பயமும் ஒட்டகச்சிவிங்கி இருந்துக்கு ,இருந்தாலும் பழம் திருடி திங்கற ஆசையில திருட்டுத்தனமா எல்லாரையும் ஏமாத்தி பழங்களை திருடி தின்னுக்கிட்டு இருந்துச்சு ஒட்டகச்சிவிங்கி

தன்னோட பசியை போக்கிகிடாரத்துக்கு படைக்கப்பட்ட பழங்கள ஒட்டகச்சிவிங்கி திருடி திங்கிறது பார்த்த குரங்கு கடவுள்கிட்ட முறையிட போச்சு, அப்பத்தான் எல்லா மிருகங்களுக்கும் ஒரு உண்மை தெரிஞ்சிடிச்சி, இனிமே யாரும் கடவுளை பார்க்க முடியாது தங்களுடைய கோரிக்கைகளை வேண்டுதல் மூலமாகத்தான் கடவுளுக்கு செலுத்த முடியும் அப்படின்ற உண்மைய எல்லா மிருகங்களுக்கு தெரிய வந்துச்சு உடனே கடவுளை பார்த்து பசியில இருந்த குரங்கு வேண்டிகுச்சு எனக்கு படைக்கப்பட்ட உணவு திருடு போய்கிட்டே இருக்கு இதுக்கு நீங்க தான் ஏதாவது செய்யணும்னு வேண்டிகிடுச்சு

அப்பத்தான் ஒட்டகச்சிவிங்கிக்கு ரொம்ப தைரியமே வந்துச்சு அப்ப கடவுள் நேர்ல வந்து நம்மள தண்டிக்க மாட்டாரா அப்படின்னு ஒரு திருட்டு எண்ணமும் வந்துச்சு அதனால பகல் வேலையில கூட குரங்குக்கு முன்னாடி இருந்த பழங்கள பிடுங்கி தின்ன ஆரம்பிச்சுருச்சு இதை பார்த்த குரங்கு ரொம்ப வருத்தப்பட்டு கடவுள்கிட்ட போயி வேண்டிச்சு

அப்பத்தான் கடவுளோட குரல் குரங்குக்கு கேட்டுச்சு நான் தான் நேரா வரமாட்டேன் என்று சொல்லி இருக்கேன் ஆனா எளியோர்களை வளியோர்கள் தண்டிச்சா வேற மிருகங்கள் ரூபத்தில் கூட என்னால வர முடியும் உனக்கான நீதி உன் நண்பர்களாலே கிடைக்கும் அப்படின்னு அந்த குரல் சொல்லுச்சு இதைக் கேட்ட குரங்கு ரொம்ப திருப்திப்பட்டு தன்னுடைய இடத்துக்கு போச்சு

அப்பத்தான் ஒரு பெரிய யானை குரங்குக்கு வச்சிருந்த பழக்கங்களை பிடிங்கி தின்னுக்கிட்டு இருந்துச்சு அடடா ஏற்கனவே இந்த திருட்டு ஒட்டகச்சிவிங்கி பழத்த திங்குது இப்ப இந்த பெரிய யானை வேற ஏன் நமக்கு இன்னைக்கு சாப்பாடு எதுவும் கிடைக்காது போலையே அப்படின்னு வருத்தப்பட்டுச்சு அந்த நேரத்தில் தான் ஒட்டகச்சிவிங்கி வந்து யானை கிட்ட வம்பு இழுத்துச்சு

நான் பழங்கல சாப்பிடுறத தெரிஞ்ச கடவுளே என்னகிட்ட எதுவும் கேட்க மாட்டார் நீ வந்து எனக்கு முன்னாடியே என் பழங்களை தின்கிறாயா அப்படின்னு யானைய வம்பு இழுத்துச்சு அதோட யானையோட உடம்ப பத்தியும் ரொம்ப கேவலமா பேசுச்சு ஒட்டகச்சிவிங்கி பொறுத்து பொறுத்து பார்த்த யானை தன்னுடைய துதிக்கையை பயன்படுத்தி ஒட்டகச்சிவிங்கியோட கழுத்த புடிச்சு ஒரு சுத்து சுத்துச்சு அதுல ஒட்டகச்சிவிங்களோட கழுத்து பத்து அடிக்கு மேல நீண்டு கிடைச்சு,

கழுத்து நீண்ட ஒட்டகசிவிங்கியால குனிஞ்சு பார்க்க கூட முடியல ,தன்னோட கால்களை மடக்கையாவது உக்கரலாம்னு பார்த்துச்சு அதுவும் அதனால முடியல ,அடடா திருட்டு தனம் செஞ்ச தனக்கு கடவுள் சரியான தண்டனை கொடுத்துட்டாருனு புரிஞ்சிகிடுச்சு அது

இத பார்த்த குரங்குக்கு அப்பதான் புரிஞ்சிச்சு அடடா கடவுள் நம்ம வேண்டுதலை ஏத்துக்கிட்டார் போல இப்ப இந்த ஒட்டகச்சிவிங்கியால கீழ தொங்குற பழங்களை குனிஞ்சு சாப்பிட முடியாது மரங்களுக்கு மேல இருக்கிற இலைதழைகளை மட்டுமே சாப்பிட முடியும் அப்படின்னு நினைச்சு சந்தோஷப்பட்டுச்சு அன்னையில் இருந்து கழுத்து நீண்டு போன ஒட்டகச்சிவிங்கி மரங்களுக்கு கீழ தொங்குற பழங்களை சாப்பிடாம மரத்துக்கு மேல இருக்கிற இலைகளை மட்டுமே சாப்பிட்டு கடவுள் தனக்கு விதிச்ச உணவு மட்டுமே உண்ண ஆரம்பிச்சுருச்சு

ஆப்பிரிக்க காட்டு கதைகள் ஒட்டகச்சிவிங்கியோட கழுத்து ஏன் அவ்வளவு நீளமா இருக்குன்னு கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு நிறைய கதைகள் சொல்லப்பட்டாலும் இதுவும் ஒரு கிராமிய கதையாவே இந்தியால சொல்லப்படுது

Exit mobile version