Site icon தமிழ் குழந்தை கதைகள்

ஆப்பிரிக்க பறவை -Wings of Compassion in the Jungle

ஆப்பிரிக்க பறவை -Wings of Compassion in the Jungle:-குவா காட்டுல நிறைய மிருகங்களும் பறவைகளும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அவங்க கூட்டம் கூட்டமா வாழ்ந்தாலும் எந்த காரணத்தை கொண்டும் காட்ட விட்ட வெளியில் போயி கிராமத்து பகுதியில் நடமாட மாட்டாங்க,அதுவும் மனிதர்கள் வாழுற பகுதிக்கு போகவே மாட்டாங்க

ஏன்னா அவங்களோட முன்னோர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மனிதர்கள் வாழ்கிற பக்கம் போகக்கூடாது அவங்க எது குடுத்தாலும் வாங்கி சாப்பிடக்கூடாது அவங்க மிச்சம் வச்சுட்டு போன உணவு பொருட்களை கூட எடுத்து சாப்பிடக் கூடாதுன்னு அவங்களுக்கு உள்ளயே கட்டளை இட்டுட்டு போயிருந்தாங்க அதனாலயே எந்த மிருகங்களும் பறவைகளும் மனிதர்கள் குடியிருப்பு இருக்குற கிராமத்து பக்கம் போக மாட்டாங்க

அப்பத்தான் ஒரு நாள் காலையில தூங்கி எந்திரிச்ச ஒரு குரங்கு ஒரு ஆப்பிரிக்க பறவ கீழ கிடக்கிறத பார்த்தாரு வேகமாக ஓடிப் போயி குட்டி பறவையே உனக்கு என்ன ஆச்சு அப்படின்னு கேட்டாரு அப்பதான் அந்த பறவை சொல்லுச்சு நான் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து வரேன் தொலைதூரம் பயணம் செய்கிறது எங்களுடைய சுபாவம் அப்படி வர்றப்ப இந்த கிராமத்துல இருக்குற மனுஷங்க என்னோட இறக்கையை கல்லால அடிச்சு ஒடிச்சிட்டாங்க என்னால பறக்க முடியாம இந்த காட்டில் வந்து விழுந்துட்டேன் அப்படின்னு சொல்லுச்சு

அத கேட்ட குரங்கு அந்த பறவையை தூக்கிட்டு போயி ஆமை வைத்தியர் கிட்ட கொடுத்து வைத்தியம் பார்க்க சொல்லுச்சு அவரும் குட்டி குட்டி சுள்ளி களை பறவையோட இறகுல கட்டி மருந்து ஊத்தி வைத்தியம் பார்த்தாரு கொஞ்ச நாளிலேயே அந்தப் பறவை நல்லா பறக்க ஆரம்பிச்சிருச்சு அப்பத்தான் அந்த ஆப்பிரிக்க பறவை சொல்லுச்சு நான் இங்க வந்து ரொம்ப நாளாச்சு நான் திரும்பி எங்க நாட்டுக்கு பறந்து போகணும்

ஆனா இந்த மனிதர்களை கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது என்று எனக்கு தெரியல அப்படின்னு சொல்லுச்சு இதை கேட்ட குரங்கு காட்டில் இருக்க மிருகங்கள் எல்லாரையும் கூப்பிட்டு யோசனை கேட்டுச்சு மனிதர்கள் இருக்கிற பகுதியை தவிர்த்துட்டு எந்தப் பகுதியில பறந்து போனா ஆப்பிரிக்க நாட்டுக்கு போகலாம் அப்படின்னு யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க அப்படின்னு சொல்லுச்சு குரங்கு

நிறைய மிருகங்கள் எல்லா பகுதிகளையும் மனிதர்கள் பரவி இருக்காங்க சிலர் நகரத்தில் இருக்காங்க சிலர் கிராமங்கள்ல வசிக்கிறாங்க எப்படி போனாலும் இந்த பறவை மனிதர்கள் வாழ்கிற பகுதிக்கு போயே ஆகும் அதனால இதுக்கு ஆபத்து தான் அதிகம்னு சொல்லி எல்லாரும் அந்த ஆப்பிரிக்க பறவையை பயமுறுத்துனாங்க

அப்பத்தான் ஒரு புத்திசாலி நரி அங்க வந்துச்சு மனிதர்கள் வாழற இடத்தை கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம் நம்ம காட்டுல இருக்கவங்க யாரும் மனிதர்களோட பழகுறது கிடையாது ஆனால் அவங்க கொடுக்கிற உணவை சாப்பிடுவது கிடையாது அவங்களுக்கு உதவி செய்றது கிடையாது ஆனா இதை எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு இருக்கிற ரெண்டும உயிரினங்கள் இருக்குங்கள் காக்கைகளும் நாய்களும்

மனிதர்கள் எங்கெங்கெல்லாம் இருக்காங்களோ அந்த பகுதியில் எல்லாம் வானத்தில் காக்கா பறக்கும் தரை பகுதிகள்லயும் மனிதர்கள் நடமாட்டம் இருக்குற இடங்கள்லயும் நாய்கள் இருக்கும் இதை கவனிச்சாலே போதும் அந்தப் பகுதியில மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று புரிஞ்சுக்கிடலாம் அந்தப் பகுதியை தவிர்த்துட்டு மறந்தாலே நீ உன்னுடைய நாட்டுக்கு சுலபமா போயிடலாம் அப்படின்னு சொல்லுச்சு

இதைக்கேட்ட எல்லாம் மிருகங்களும் கைதட்டி நரியோட புத்திசாலித்தனத்தை பாராட்டினாங்க சிறகு உடைந்து போன ஆப்பிரிக்கப் பறவையும் புத்திசாலி நரி சொன்னபடி காக்கைகளையும் நாய்களையும் பார்த்துக்கிட்டே மெதுவா பறந்து தன்னோட நாட்டுக்கு போய் சேர்ந்துச்சு மனிதர்களோடு கீழ்மையான எண்ணங்கள் உலகத்தில் இருக்கிற மத்த மிருகங்கள எப்படி பாதிக்குதுன்னு சொல்றதுக்காகவே எழுதப்பட்ட கதை இது

Exit mobile version