ஆந்தையும் குரங்கும் -Owl’s Symphony of Revenge:-குவா காட்டுல காலை நேரங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சோ அதே நேரத்துல இரவு நேரங்களும் ரொம்ப சந்தோசமாக இருந்துச்சு இரவு நேரங்களில் வேட்டையாடுற ஆந்தைகளும் மத்த மிருகங்களும் சுதந்திரமாவே அந்த காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க
பகல்ல வேட்டையாடுற வேட்டைக்கார மிருகங்கள் ராத்திரி நிம்மதியா தூங்குறதுக்கு ஏதுவா இருந்துச்சி குவா காடு அதே நேரத்துல ராத்திரி வேட்டையாடும் மிருகங்கள் பகல்ல ஓய்வு எடுப்பதற்கும் அங்கு நிறைய சுதந்திரம் இருந்துச்சு அப்படி இருக்கிறப்பதான் கவா காட்டுல இருந்து ஒரு சேட்டைக்கார குரங்கு குவா காட்டுக்கு குடி வந்துச்சு
அது குவா காட்டுல இருந்த ஒரு பெரிய குளத்துக்கு பக்கத்துல இருந்த ஆலமரத்துல வாழலாம்னு முடிவு செஞ்சுச்சு அப்பத்தான் கவனிச்சுச்சு அங்க ஒரு குட்டி வீட்டில ஒரு ஆந்தை வாழ்ந்துகிட்டு வர்றத ஆனா அந்த ஆந்த எப்ப பார்த்தாலும் பகல் முழுசும் தூங்கிட்டு இருக்குறத கவனிச்சு குரங்கு
ஏன் ஆந்தையாரே யாரு இப்படி பகல் முழுசும் தூங்கிக்கொண்டே இருக்கீங்களே நீங்க என்ன ரொம்ப சோம்பேறியா அப்படின்னு கிண்டல் செய்ய ஆரம்பிச்சுருச்சு குரங்கு மெதுவா கண்விழிச்சுப் பார்த்த அந்த ஆந்த சொல்லுச்சு நாங்க ராத்திரி வேட்டையாடர மிருகங்கள் தயவு செஞ்சு என்னை தொந்தரவு செய்யாதே நாங்க ஓய்வு எடுத்தோம்னாத்தான் நைட்டு சுறுசுறுப்பா வேட்டையாடி சரியான அளவு உணவு உண்ண முடியும் அப்படின்னு சொல்லுச்சு
இதெல்லாம் அந்த சேட்டைக்கார குரங்குக்கு காதுல ஏறவே இல்ல எப்ப பார்த்தாலும் ஆந்த தூங்குற நேரத்திலேயே மரத்து மேல இருந்து ஒவ்வொரு கிளையா குதிச்சு சேட்டை பண்ணி ஆந்தையோட தூக்கத்தை கெடுத்துக்கிட்டே இருந்துச்சு பொறுத்து பொறுத்து பார்த்த அந்த இந்த குரங்குக்கு சரியான பாடம் புகட்டணும்னு நினைச்சுச்சு
ராத்திரி ஆனதும் குளத்து பக்கம் போச்சு அந்த ஆந்த அங்க தூங்கிக்கிட்டு இருந்த தவளைகளை எழுப்பி உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா இன்னைக்கு நம்ம சிங்கராஜாவுக்கு ரொம்ப சந்தோசமான நாள் அவர் ஆட்சிக்கு வந்து 20 வருஷம் ஆகிடுச்சு அதனால இன்னைக்கு ராத்திரி முழுசும் பாட்டு கச்சேரி இருக்கு உங்களால எவ்வளவு பாட்டு பாட முடியுமோ விடிய விடிய படுங்க யாரு ரொம்ப நேரம் பாட்டு பாடுறாங்களோ அவங்களுக்கு சிறந்த பரிசு சிங்க ராஜா கொடுப்பாரு அப்படின்னு சொல்லிட்டு போயிருச்சு அந்த ஆந்த
நீரா மரத்துக்கு அடியில் வந்து அங்கே இருந்த விட்டில் பூச்சிகளை எழுப்பிச்சு ஆந்த என்ன தூங்கிக்கிட்டு இருக்கீங்க இன்னைக்கு பாட்டு கச்சேரி இருக்கு தெரியாதா அப்படின்னு சொல்லி சிங்கராஜாவை பத்தி சொல்லுச்சு உடனே உற்சாகமான அந்த வீட்டில் பூச்சிகள் ரத்தரி முழுசும் இசை இசைக்குறதா வேணாமா யோசிக்கும் பொழுது தான் தவளைகள் பாட ஆரம்பிச்சு சத்தம் கேட்டுச்சு ஆஹா நமக்கு துணைக்கு தவளைகள் பாட ஆரம்பிச்சுடுச்சுங்க ,அதுகளோட பாட்டுக்கு நாம இசை இசைப்போம்னு நினைச்சவிட்டில் பூச்சிகள் தங்களோட வாத்திய கருவிகளை பயன்படுத்தி தாளம் போட்டுக்கிட்டே கிரீச் கிறீச்ன்னு கத்த ஆரம்பிச்சுச்சுங்க
அப்பத்தான் அங்க இருந்த மின்மினி பூச்சிகள் கண்விழித்து பார்த்து சொன்னார்கள் என்ன இன்னைக்கு அளவுக்கு அதிகமா பாட்டு சத்தங்கள் சுற்றியும் கேட்குது அப்படின்னு யோசிச்சுகிட்டு இருக்கும்போது அங்க வந்து ஆந்தை உங்களுக்கு விஷயம் தெரியாதா இன்னைக்கு சிங்க ராஜாவோட ஆட்சி காலம் 20 ஆண்டுகள பூர்த்தி செய்து இருக்கு அதனால எல்லாரும் பாட்டு பாடி கொண்டாடுறாங்க உங்களுக்கு விருப்பம் இருந்துச்சுனா இந்த மரத்தை ஜொலிக்க வைங்க பாப்போம் அப்படின்னு சொல்லுச்சுங்க
உடனே சந்தோசமான வீட்டில் மின்மினி பூச்சிகள் மரத்தை சுற்றி பறந்து இரவப் பகல் மாதிரி ஆக்குச்சுங்க
இதையெல்லாம் ஏன் அந்த ஆந்த செஞ்சுச்சுனு அதுக்கு மட்டும் தான் தெரியும் இரவுல வேட்டையாடிட்டு பகல்ல தூங்கலாம்னு பாக்குறப்ப தொந்தரவு செஞ்ச குரங்க பழிவாங்கத்தான் இந்த திட்டம் இந்த திட்டம் சரியாக வேலை செஞ்சுச்சு பகல் முழுசா ஆடி ஆடி ஓடி ஆடி சேட்டை செஞ்ச குரங்கு அன்னைக்கு முழுசும் கவலையோட பாட்டு சத்தமும் வீட்டில் பூச்சிகளோட தாள சத்தமும் மின்மினி பூச்சிகளோட வெளிச்சமுமா கண்ணுல பட்டு அன்னைக்கு இரவு முழுவதும் தூங்காம முழிச்சிகிட்டு வருத்தத்தோடவே கிடந்துச்சு
மறுநாள் காலையில ராத்திரி பூரா தூக்கம் இல்லாம கண்ணு முழி பிதுங்கி போய் செவந்து போய் இருந்த குரங்க பாத்து கேட்டுச்சு அந்த ஒரு விலங்குக்கு தூக்கம் எவ்வளவு அவசியமும் இன்னைக்கு உனக்கு புரிஞ்சிச்சா அப்படின்னு கேட்டுச்சு, அப்பத்தான் தன்னோட தவறை புரிஞ்சுகிட்டு அந்த கிட்ட மன்னிப்பு கேட்டுச்சு குரங்கு
